அரானா பக்கம்

Friday 14 June 2013

திருச்செந்தூர் போனோம்


எனக்கும் ஆசிரியருக்கும் எப்போதும் புரிதல் இருந்ததேயில்லை. LKG முதல் B.Sc.,VISUAL COMMUNICATION வரை ஆசிரியர்கள் எனக்கு எல்லையிலில்லாத திவீரவாதிகள் போலதான் தெரிவார்கள். ஆனால் கல்லூரி படிக்கும்போது தமிழ் பாடம் நடத்த வந்த ஆசிரியர் திரு. கருமுருகானந்தராஜன் (தமிழ் ஆசிரியர்) ஐயா மீது தனி பிரியம் உண்டானது. அவருடன் பேசும்போது தமிழ் பற்றும் நாட்டுப் பற்றும் என்னைக் கவ்விக்கொள்ளும். அவரதுப் பேச்சு மாணவர்கள் சிந்திக்கும் திறனைத் தாண்டி சிந்திக்கவைக்கும். அவரிடம் நானும் மதியும் நிறைய உரிமை எடுத்துக்கொள்வோம். அவர் பையனுக்கு திருச்செந்தூரில் மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சிக்காக அவருடன் நானும் மதியும் திருச்செந்தூர் போயிருந்தோம்.
திருச்செந்தூர் கடலைக் காண ஆவலோடு ஆசையோடு பார்க்கப்போனேன், ஆனால் கடல் என்னை ஏமாற்றிவிட்டது. அலைகள் வராதா கடலாக காட்சியளித்தது திருச்செந்தூர் கடல். கடலில் குளிப்பதற்கு மட்டுமே மக்கள் ஆசைப்படுகிறார்கள். கரையைப் பார்த்துவிட்டு நான் கடலைப் பார்த்துவிட்டேன் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. மீனவர்கள் மட்டும்தான் கடலின் சொந்தங்கள். கடலில் குளித்தாலே உப்பு வாசனையைத் தவிர்த்து என்னுள் சொல்லமுடியாத இல்ல எழுதமுடியாத உணர்ச்சித் தொற்றிக்கொள்கிறது. சுனாமி வந்த பிறகு கடலின் குணம் மாறிப்போய்விட்டது. கடல் இனிப்பாக இருந்தால் இந்நேரம் ஒவ்வொரு கடற்கரையிலும் நூறு பெப்சி கம்பெனிகள், இருநூறு கோகோகோலா கம்பெனிகளை வந்து கடலையே காணாமல் ஆக்கியிருப்பார்கள். அங்கே சுண்டல் விற்கும் ஒருவர் சொன்னதுஇருபது வருசத்துக்கு முன்னாடி சுண்டலை ஐம்பது பைசாக்கு விற்றேன், இப்போது பத்து ரூபாய்க்கு விக்கிறேன். காய்கறி விலை ஏறிப்போச்சு, இன்னும் பத்து வருசத்துல மனுச தண்ணிக்கு அடிச்சு மல்லுக்கட்டப் போறாங்கஎன்றார். அவ்ர் சொல்வதில் பொயில்லை.
கோவிலுக்குச் சென்றோம். அங்கே ஒரு ஓவியத்தை வரைந்து சுவரில் மாட்டியிருந்தார்கள். முருகன் கையிலிருந்து ஒளி வந்து சுனாமியைத் தடுக்கும் காட்சி. சுனாமியை வென்ற சுப்ரமணியசாமிஎன்ற பஞ்ச் டயலாக்கும் எழுதியிருந்தது. உண்மையில் அங்கு சுனாமி வரவில்லைதான், ஆனால் அதற்கான காரணம் அங்கிருக்கும் முருகனா..? இல்லை வேறு ஏதாவதா…? இன்று புதிரே, இயற்கைக்கு மட்டுமே வெளிச்சம். நான் இயற்கையை நம்புபவன், சாமியை அல்ல. முருகனை தரிசிக்க வரிசையில் நின்றிருந்தோம். ஐயர் எல்லோருக்கும் விபூதி கொடுத்துக்கொண்டிருந்தார். நான் வேண்டாம் என்றேன், உடனே அவர் கோவிலுக்கு வந்து வேண்டுமென்று சொன்னால் கோவிலுக்கு வரவதே வேஸ்ட் என்றார். எனக்கு சாபம் விடுவது போல் பேசினார். நான் வருவதும் வராமலிருப்பதும் என் இஷ்டம். மூலவர் இருக்கும் அறை முழுக்க ஏர் கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது. யாரு காசுல…? வெளியில் சில ஐயர்கள் வாங்க அர்ச்சைனையா என்று கூப்பிட்டுகொண்டிருந்தனர். என்னைப் பொறுத்தவரை உலகத்திலே மிக கேவலமான தொழில் ஐயர் தொழில். ஐயர்களே இல்லையென்றால் கோவில்கள் நன்றாக இருக்குமென்பது என் அபிப்ராயம். நான் நல்லாயிருக்கணும் என் குடும்பம் நல்லாயிருக்கணும்என்றுதான் மக்கள் கடவுளிடம் வேண்டப்போகிறார்கள், அப்படியிருக்க எதற்காக ஐயர்கள். மந்திரம் சொன்னா நாம் நினைப்பது நடக்குமென்று யார் சொன்னது. கோவில் என்னமோ இவர்களுக்கு மட்டும் சொந்தம் என்பதும் போல் உரிமை கொண்டாடுவது எதனால்…? நாமே மந்திரம் சொன்னா கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டாரா…? இல்லை நமக்கு நடக்கும் காரியங்கள் தள்ளிப்போகுமா…? என்ன சாமி கும்பிட்டாலும் நடக்கறது தான் நடக்கும்’, ஆனா யாரும் கேட்கபோவதில்லை.
வடிவேலு சொல்ற மாதிரி சொன்ன
இதச் சொன்னா நம்மள பைத்தியக்காரனு சொல்றாங்கப்பா
அரானா

No comments:

Post a Comment