அரானா பக்கம்

Wednesday 19 June 2013

கத்தியுடன் ஒருவர்

நான்மதிதிரு. கருமுருகானந்த ராஜன் (கல்லூரி தமிழ் பேராசிரியர்மூவரும் அவர் வீட்டின் அருகிலுள்ள மண்தரையில் உட்கார்ந்து இரவு பத்து மணியிலிருந்து பேசிக்கொண்டிருந்தோம். செல்போனிலிருக்கும் டார்ச் லைட் மூலம்வெளிச்சத்தை பேச்சுக்காக பயன்படுத்திக்கொண்டோம். எங்களைச் சுற்றி சில தரைவாழ் ஜிவராசிகள் ஊர்ந்துகொண்டும்,தாவிக்கொண்டும் இருந்ததுஅவர்களுக்கு நாங்களும் இடையூறாக இல்லைஎங்களுக்கு அவர்களும் இடையூறாகஇல்லை. செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் தான் ஒருவருக்கு பிரச்சினையாக இருந்திருக்கிறது. ஒரு மணி நேரமாகஅதே இடத்தில் உட்கார்ந்து சினிமாஇலக்கியம்அரசியல் என்று சுவாரசியமான உரையாடல்கள்தொடர்ந்துகொண்டேயிருந்தது. திடீரென்று ஒருவர் கத்தியுடன் எங்களைக் குறுக்கிட்டார்கோபமாக நாங்களென்றுவிசாரிக்க ஆரம்பித்தார். எங்களுக்கு எதுவுமே புரியவில்லைஎதுக்காக தேவையில்லாமல் பேசிக்கிட்டாருன்னு. அவர்இருக்கும் வீடு ஒரு ஐநூறு மீட்டர் தூரமாவது இருக்கும். செல்போன் டார்ச் லைட் அவருக்கு ஒரு பொண்ணு (விலைமாது)ிக்னல் கொடுக்கிற மாதிரி தெரிஞ்சிருக்குஅவரும் திருப்பி டார்ட் லைட் மூலம் சிக்னல் கொடுத்திருக்கிறார்,ஆனால் நாங்கள் அதை கவனிக்கவேயில்லை.
கத்தியுடன் வந்தவர் பேசிய வார்த்தைகள்
நானும் ரொம்ப நேரமா பாத்துக்கிட்டேயிருக்கே நீ லைட்ட ஒரே பக்கமா அடிச்சிட்டுருந்த.”
லைட்ட அமத்தி அமத்தி சிக்னல் காமிச்சநானும் ஏதோ ஒரு பொண்ணுதான் நினைச்சேன்.”
நானும் திருப்பி லைட்ட அடிச்சே… நீ பாத்தியா.”
வாத்தியாரு இவ்வளோ நேர பேசி காலைல எப்படி நீ பாடம் நடத்துவ.”
அவர் மழைக்கல்ல வெயிலுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுகியதில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஒருகல்லூரி பேராசிரியரிடம் எப்படி பேசவேண்டுமென்ற இங்கிதமும் தெரியவில்லை. எங்கள் மூவரையும் அவர் மிககேவலமாக நினைத்தான் பேசவந்திருக்கிறார். ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது அவர் மனைவிமேல் அவருக்குசந்தேகம்இன்னொன்று இவருக்கு இன்னொரு பெண்ணின் மேல் ஆசை. இவரது தொழில் லாரி ஒட்டுனர்.
எங்களுக்கு மொத்தமாக மூட் அவுட். இதைவிட ஒரு மனிதனை மன உலைச்சலைக்குள் உட்படுத்த முடியாது.அதற்குமேல் எதுவும் பேசப் பிடிக்காமல் அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். பேசவேண்டிய விஷயங்கள் அனைத்தும்அந்தப் பிரச்சனையில் மூழ்கிப்போனது.
வடிவேலு ஒரு படத்தில் பீடா சாப்பிட்டுக்கொண்டிருப்பார்நன்றாக மென்று வாயை சுழற்றி சுழற்றி சாப்பிடுவார்.அவருக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் திட்டுகிறானென்று நினைத்துவடிவேலுவை அடித்து துவைத்துவிடுவார். அதுமாதிரி தான் எங்களுக்கும் நடந்ததுகாமெடி சொல்லப்பட்ட அந்தக்காட்சி எங்களிடம் சீரியஸாக விளையாடிவிட்டது. சாதாரண செல்போன் டார்ச் லைட் இவ்வளவு பிரச்சனைக்குகாரணமாகியிருக்கிறது. எப்படியெல்லாம் ஒரு மனிதனை இந்த சமூகம் சிந்திக்க வைக்கிறது அல்லது தூண்டுகிறது.
இரவில் யோசித்து யோசித்து குழம்பிப் போனேன்.

No comments:

Post a Comment