அரானா பக்கம்

Wednesday 19 June 2013

கேலிச் சித்திரன் – 2

மின்சார ரயில் நிறுத்தம்
பேருந்துகள் போல் இல்லாமல் நம் பயணத்தை சுகமானதாக மாற்றும் தண்டவாளக் கப்பல் மின்சார ரயில். வெறும் பத்துரூபாயை வைத்துக்கொண்டு வில்லிவாக்கத்திலிருந்து மாம்பலம் வரை சென்றிருக்கிறேன்அன்றைய நேரமும்சென்றிருக்கிறது. மின்சார ரயிலில் நாம் பல விஷயங்களைப் பார்க்கலாம். பாட்டு பாடுபவர்கள் முதல் பாக்கெட்டில்பிஸ்கட் விற்கும் சிறுவர்கள் வரை ரயிலை ஒரு நகரும் வியாபாரக் கடையாக நினைத்து தன் ஒரு நாள் அல்ல வாழ்நாள்வாழ்க்கையை நகர்த்துவார்கள்காதல்கள்சோகங்கள்சிரிப்புகள்மனக்கசப்புகள் இப்பிடி நிறைய உணர்வுகள் நொடிப்பொழுதில் வந்து வந்து போகும். பல முகங்கள் பார்க்கும்பொழுது என்னிடம் ஏதாவது பேசுங்கள் என்ற சாயல்தான்தெரியும்ஆனால் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்து நிறுத்தும்அதற்குள் அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தமும்வந்துவிடும்இப்படி பேசாமல் போன வார்த்தைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. சில பேர் குழுவாக இணைந்துவருவார்கள்ஒரே ரயிலில் போவார்கள். சரக்கு ஏற்றும் பெட்டியில் ஏறிக்கொண்டு சீட் விளையாடுவார்கள். சென்னைத்தமிழில் பாராட்டியும் திட்டியும் வருவார்கள். இன்னொரு குழு கையைத் தாளமாகத் தட்டிக்கொண்டு பாட்டுபாடிக்கொண்டேவருவார்கள்.  புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு இந்தக் காட்சிகளை ரசிக்கத் தொடங்கிவிடுவேன். முக்கால் வாசிஎம்ஜிஆரின் தத்துவம் மற்றும் காதல் பாடல்கள்தான் பாடுவார்கள். இதை எதையுமே ரசிக்காமல் சில மனித ரோபோக்கள்காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக்கேட்பார்கள். உலக பொது அறிவு களஞ்சியம் புத்தகத்தை விற்பதற்கு அந்தவிற்பனையாளர் சொல்லும் சொற்கள் கட்சித் தலைவர்களின் வாக்குறுதியை விடப் பெரிய பொய்களாலிருக்கும்ஒன்றுஅல்லது இரண்டு பேர்தான் வாங்குவார்கள்ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயம்.
பார்க் டவுன் ஸ்டேஷனிலிருந்து வேளச்சேரி செல்வதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். திருவல்லிக்கேணிசேப்பாக்கம்,மயிலாபூர்கோட்டூர்புரம்திருவான்மீயூர் ஏரியாக்கள் பறக்கும் ரயிலிலிருந்து பார்ப்பதற்கே அழகாகயிருக்கும்.சேப்பாக்கத்தில் நிற்கும்போது கிரிக்கெட் மைதானத்தை எட்டி எட்டிப் பார்ப்பேன். ஐபில் போட்டிகள் நடக்கும் மைதானம்வண்ணமயமாக காட்சியளிக்கும். வேலைவாய்ப்புமனைகள் விற்பனைஇப்படி சில சுவரொட்டிகள் ரயிலொட்டிகளாகமாறியிருக்கும். மனிதர்கள் தங்கள் பெயரை எழுதி தன்னை ரயிலுக்கு அறிமுகம் செய்துகொள்வார்கள். இந்நாள் வரைஎன்னை அறிமுகம் செய்துகொண்டதில்லை. ரயிலை விட்டு மக்கள் ஓடுவதைப் பார்க்கும்பொழுது வியப்பாக இருக்கும்.பறவைகள் தன் கூட்டுக்கு போவதைவிட வேகமாக தன் வீட்டை அடைய மற்றவர்களை இடித்துக்கொண்டு ஓடுவார்கள்.சேரவேண்டிய இடம் வந்தவுடன் ரயிலுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்வோம். மறுநாள் காலை மீண்டும் அதேரயிலுக்காக காத்துக்கொண்டிருப்போம். மின்சார ரயில் பல ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ளதுஎப்போதும் அந்தரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கிறது. யாராலும் அதை திருட முடியாது.
(சித்திரம் தொடரும்)

No comments:

Post a Comment