அரானா பக்கம்

Friday 14 June 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள்

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 15
(மாலை 26/0/4/2013)
மாலை தூக்கம் கண்ணைக் கட்டியது.
நானும் நண்பர்களும் போட்டிக்காக ஒரு கிராமத்துக்கு சென்றிருந்தோம். அது ஐயர்கள் அதிகம் வாழும் கிராமம். நான் எதிர்பாராமல் என் பள்ளி நண்பன் சக்ரவர்த்தியை சந்தித்தேன். அவனுடன் பேசிக்கொண்டே அந்தக் கிராமத்தின் வீதிகளில் நடந்து போகிறோம். வீதியிருக்கும் ஐயர் வீடுகள் வரவேற்றன. பார்ப்பதற்கும் அழகாகவுமிருந்தன. ஒரு கடையில் மாஸ்ஸா குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் என்னருகே வந்தால், நான் அவளைப் பார்த்தேன். அவள் என் கல்லூரி தோழி. காதலால் தோல்வி கண்ட அவள் அதிலிருந்து இன்னும் மீளவில்லை. என்னுடன் அரைமணிநேரம் பேசினாள். அவள் பெரியப்பா வர எனக்கு டாடா காட்டிவிட்டு சென்றாள்.
எனையறியாமல் ஆறு மணிக்கு எழுந்துவிட்டேன், ஆறு மணிக்கு மேல் தூக்கம் கூடாதென்று தான்.
(இன்னும் கனவுகள் வரும்)
பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 16
(இரவு 10/0/5/2013 – 11/05/2013 காலை)
நான் வில்லிவாக்கத்திலிருந்தேன், அங்கே அடிக்கடி தாதாக்களால் தொல்லைகள் வரும். நான் ஒரு தடவை போபப்பட்டு தாதா ஒருவனை அடித்துவிட்டேன். அதன் பின் என்னை எங்குப் பார்த்தாலும் மக்கள் தங்கள் குறைகளை என்னிடம் கூறினார்கள். நாயகன் வேலுநாயக்கர் போல் நானும் உலா வந்தேன்.
(இன்னும் கனவுகள் வரும்)
பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 17
(இரவு 11/0/5/2013 – 12/05/2013 காலை)
எங்கள் வீட்டில் யாருமில்லை, நானும் என் நண்பர்களும் வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்தான். எங்களிடம் காசு கேட்டான். நாங்கள் யாரும் கொடுக்கவில்லை, காசு கொடுக்காததால் அவன் எங்களை அடிக்க ஆரம்பித்தான். நாங்களும் அவனை திருப்பி அடித்தோம். நான் கட்டையை எடுத்து வெளுத்துக்கட்டிவிட்டேன். கை வலிக்க அடித்துவிட்டு அவனை வெளியே தூக்கிஎறிந்தோம். அவன் எங்களை முறைத்துக்கொண்டே ஊர்ந்து நகர்ந்து போனான். ஊரிலிருந்து என் அப்பா அம்மா வர நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு போனார்கள். இரவில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து என்னைக் கூப்பிட்டார், நானும் எழுந்து லைட்டை போட்டு அவர் அருகில் போனேன். உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் கூப்பிடுகிறார் என்றார். போய் பார்த்தால் அங்கே பத்துப்பேர் நின்றிருந்தனர். அவர்களுடன் எங்களிடம் அடி வாங்கிய பிச்சைக்காரனும் இருந்தான். நான் அவர்கள் முன் நின்றேன். பின் என்ன…?
(இன்னும் கனவுகள் வரும்)
பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 18
(இரவு 12/0/5/2013 – 13/05/2013 காலை)
நாங்கள் ஸ்கூல் படித்துக்கொண்டிருக்கிறோம். பெண்களுடன் நான் அதிகம் பேசுவதில்லை. +2 பரீட்சை நெருங்குவதால் எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம், ஒருவர் மேல் ஒருவர் இங்க் அடித்தும் தண்ணீர் அடித்தும் விளையாடினோம். அப்பொழுது ஒரு பெண்ணின் டிபன்பாக்ஸ் இருந்தது. அதிலிருந்து சாப்பாட்டை நானும் என் நண்பர்களும் திருடி சாப்பிட்டோம்.
(இன்னும் கனவுகள் வரும்)




No comments:

Post a Comment