அரானா பக்கம்

Wednesday 29 May 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 11
(இரவு 05/04/2013 – 06/04/2013 காலை)
நான் என் குடும்பத்துடன் ஒரு மலை பிரதேசத்தில் வசிக்கிறேன். எனக்கு தம்பி இருக்கிறான்ரொம்ப புத்திசாலி. அவன் வித்தியமாக யோசிப்பான்ஏதாவதுசெய்துகொண்டேயிருப்பான்என்னைவிட இரண்டு வயது குறைவு. எனக்கு 16 வயது. ஓவ்வொரு வீடும் தனித்தனியாக இருக்கும். மின்சாரத்தை எங்கிருந்தோகடத்திவந்து எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். என் தம்பி வெடிகுண்டு மாதிரி ஏதோ செய்துவைத்திருந்தான்அது என்னவென்று கேட்டேன்என்னைதள்ளிவிட்டான்எனக்கு கோபம் வந்துவிட்டது. எங்களிருவருக்கும் சண்டை வந்துவிட்டது. ஒரு ஊசியால் என்னைக் குத்திக்கொண்டேயிருந்தான்அந்தவலியைத் தாங்கிக்கொண்டும் தடுத்துக்கொண்டுமிருந்தேன். அப்பா வந்து எங்களைத் தடுத்தார். என்ன நடந்ததுன்னு விசாரணை நடத்தினார். அப்பொழுதுவெளியே வெடிப்பது போல் சத்தம் கேட்டது. போய் பார்த்தால் ஒரு POST மரம் வெடித்துச் சிதறியது கிடந்தது. நான் ஓடிப்போய் பக்கத்தில் பார்த்தேன். அப்படியேவரியாக ஓவ்வொன்றாக வெடித்துக்கொண்டேயிருந்தது.அதோடு கனவும் முடிந்தது.
(இன்னும் கனவுகள் வரும்)

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 12
(இரவு 08/04/2013 – 09/04/2013 காலை)
காலையில் எழுந்தவுடன் நான் படித்துக்கொண்டிருந்தேன். வினோத் (மாமா பையன்வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். ராஜா வாடா நம்ம கோடம்பாக்கத்துபோய் பணியாரம் சாப்பிடுவோம் என்று கூப்பிட்டான். நான் முதலில் மறுத்தேன்பின  இருவரும் பணியாரம் சாப்பிடப் போனோம்இரண்டு கனவுகள் வந்தது.எழுதுவதற்குள் என் நினைவைவிட்டு அழிந்துவிட்டது. இப்பிடித்தான் நிறைய கனவுகளை இழந்திருக்கிறேன்.
(இன்னும் கனவுகள் வரும்)

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 13
(இரவு 14/04/2013 – 15/04/2013 காலை)
நான்மனோஜ்மாணிக்கம் மூன்று பேரும் ஒரு வீட்டுக்கு போகிறோம். அந்த வீடு மூன்று நாட்களாக பூட்டியிருக்கிறது நான் சொன்னேன். மாணிக்கம் எப்பிடியோஅந்த வீட்டுக்குள் போயிவிடுகிறான். நானும் மனோஜும் வெளியில் நின்றோம். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டேபோனார்எனக்கு தெரிந்தவர்தான். அவர் என்னை அழைத்து வீட்டுக்கு கூட்டிட்டு போனார். நானும் அவரும் பேசிக்கொண்டேயிருந்தோம். அப்போது மாணிக்கம்லைட்டை போட்டுவிட்டான். அந்த வீட்ல யாருமே இல்லையே எப்பிடி லைட் எரியுது அவர் கேட்கநான் பதறிப் போனேன். அவரு போலீஸுக்கு போன்செய்தார்நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். ஒருவன் சைக்கிளில் வந்தான்அவனுடன் வீட்டுக்குப் போய்விட்டேன். மாணிக்கத்தையும் மனோஜையும் போலீஸ்பிடித்துவிட்டது. மறுநாள் வக்கீல் மூலமாக நான் அவர்களை வெளியே கொண்டுவந்தேன்.
(இன்னும் கனவுகள் வரும்)

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 14
(இரவு 25/04/2013 – 26/04/2013 காலை)
நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கிறேன்என்னை ஒரு பெண்ணுக்கு பிடித்திருக்கிறது போல பார்த்துக் கொண்டேயிருந்து. அந்தப் பெண் அழகுதானிருந்தாள்.எனக்கு அவளைப் பிடிக்காமல் இல்லை. நான் மதியம் சாப்பிடுவதற்காக கேண்டீன் போகிறேன்அப்போது அவள் எதிரே வந்தாள். அவளுடன் ஒரு சின்னப் பெண்என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தாள். நான் டிபன் பாக்ஸை திறந்தபோது அந்த சின்னப் பொண்ணு என்னருகே வந்த இரண்டு டோக்கனை நீட்டுகிறாள்.அது இரண்டு தோசைக்கான டோக்கன். அந்த அக்கா கொடுக்க சொன்னாங்க என்று சொல்லி சிரித்துக் கொண்டேப் போகிறாள்.
(இன்னும் கனவுகள் வரும்)


No comments:

Post a Comment