அரானா பக்கம்

Wednesday 3 April 2013

வானம்


பூமி மட்டுமல்ல எல்லா கிரகங்கள் தோன்றும்போதே வானம் தோன்றிவிட்டது. இந்த உலகத்தில் வானத்தைத் தாண்டி எதுவுமேயில்லை. ஆதனால்தான் வானத்தை நான் எப்போதும் ஆச்சரியத்துடந்தான் பார்ப்பேன். தினமும் நாம் எத்தனை முறை வானத்தைப் பார்ப்போம். வானத்தில் என்ன இருக்கிறதென்று யாருக்காவது தெரியுமா? காலையிலிருந்து மாலை வரை எண்ணிக்கையற்ற மேகங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கிறது. பல வடிவங்களை எடுக்கிறது, பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது. வெறுமனே வானம் மேங்களுக்கு சாலையாகிறது. மேகங்கள் தன் வீட்டைத் தேடி அலைகிறதோ என்ற சந்தேகம் எனக்கு, அப்படியொரு வீடுருந்தால் எப்படியிருக்குமென்று நினைத்துப் பார்க்கிறேன். வானம் இடியை தாங்கிக் கொள்கிறது, மின்னலை வாங்கிக் கொள்கிறது. அறிவியல் கூற்றுப்படி நாம் வானத்தைப் பார்க்கவேண்டாம். ஏன் எல்லா பறவைகளும் மேலே பறக்கிறது? றெக்கை இருப்பதால் மட்டுமல்ல, மழை வருவதற்கான அறிகுறி வானத்தில்தான் தெரிகிறது. சூரியனை ரசிக்கும் ஒரு நண்பன் போல, நிலாவை நேசிக்கும் ஒரு காதனைப்போல் தான் வானம் இருக்கிறது. நாட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறது.
வானம் எத்தனை சுனாமியைப் பார்த்திருக்கும், எத்தனைப் பூகம்பத்தைப் பார்த்திருக்கும், எத்தனைப் புயலகளைச் சந்திச்சிருக்கும், ஆனால் அதனிடம் எந்த மாற்றமுமிருக்காது. கடைசி உலகம் அழியப்போவதையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது வானம் மட்டும்தான். கீழிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான கதவு மாதிரிதான் எனக்குத்தெரிகிறது, அந்தக் கதவுக்குப் பின்னால் யாருமில்லை.
வானத்தை மையமாகக் கொண்டு எத்தனைக் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.  ஜென் முதல் காதல் கவிதை வரை வானத்தை எழுதியாகிவிட்டது.
நள்ளிரவு அலைகளில்லை












காற்றுமில்லை வெற்றுப்படகு
மிதந்து கொண்டிருக்கிறது நிலவொளியில்
தோஜென் என்ற ஜப்பான் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை இது.
அவர் வானத்தை கடல் போலவும், மேகத்தைப் படகு போலவும் சித்தரிக்கிறார்.
நான் வானத்தை நிறைய புகைப்படங்களை எடுத்துள்ளேன். எல்லாப் புகைப்படங்களும் எனக்கு புது ஆடைகளைப் போலதான் தெரிகிறது, புத்தாடைகளை உடுத்தும்போதுள்ள பரவசம் தான் எனக்கு வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் தோன்றும்.
மனிதனின் உயிர் பிரிந்தாலும் அவனது ஆன்மா இங்கே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் இறந்தவர்கள் வானத்தில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்றுமிருகிறது.   

No comments:

Post a Comment