அரானா பக்கம்

Tuesday 19 March 2013


இறந்த காலத்திடம்
நட்புக் கொண்டு
பேசிக் கொண்யிருந்தேன்
நேரம் தெரியாமல்
ஒவ்வொரு வார்த்தைகளும்
ஒவ்வொரு நொடியில்
இறந்து கொண்டுயிருந்தது.
***
சடலங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்
எண்ணிக்கையில்
தவறில்லை
நேற்று இரவு
இரங்கல்
செய்தி
இன்று காலை
விபத்து                           
செய்தி
வீதியெங்கும்
பிரார்த்தனைகள்
மந்திரங்கள்
பலியாவதற்கான நேரம்
இப்படித்தான் சாகவேண்டும்
ரத்தம் சிதறி
உடல் நசுங்கி
இந்த இடத்தில்
இந்த நொடியில்
இப்படித்தான் சாகவேண்டும்
உணர்ச்சியில்லாமல்
சதையில்லாமல்
இந்தக் கடலில்
இந்த மீன்களில்
இப்படித்தான் சாகவேண்டும்
சில நிபந்தனைகள்
சில யோசனைகள்
நேரம்
தேதி
வருடம்
இவையும்
சாக வேண்டும்
அரானா

No comments:

Post a Comment