அரானா பக்கம்

Tuesday 19 March 2013

விளம்பரமான ’விஸ்வரூபம்’



விஸ்வரூபம்படத்தை இரண்டு முறைப் பார்த்தேன். மிகப்பெரிய அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்தில் சிக்கி, எந்தப் படத்திற்கும் கிடைக்காத விளம்பரத்தைப் பெற்றது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஏதோ ஒன்று பார்வையாளர்களை ஈர்க்கும். கமலின் அறிமுகம் யாரும் எதிர்பார்க்காதக் காட்சி. கமலின் உடல் மொழி, குரல் மொழி, நாணங்கள் நிறைந்த முக பாவனை மொழி, இன்னும் அந்தக் காட்சி என் கண் முன் ஓடுகிறது. கமல் சுயரூபம் எடுக்கும் காட்சி ரசிகர்களுக்கு ஹீரோயிச ஆக்‌ஷன் விருந்து. இளம் ஜிகாதி உருவாக்கப்படும் விதம் கவனமாக திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது. VISUAL EFFECTS படத்தின் பிரம்மாண்ட பங்களிப்பு. ஒளிப்பதிவும் இசையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது, அது படத்தின் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் ஆகியவை. எங்க அம்மாவுக்கு கதக் கெட்டப்பிலிருக்கும் கமல் தான் பிடித்திருக்கிறது. உண்மையில் அதில் அழகாகயிருக்கிறார் கமல். படம் கமல் என்கிற ஒரு ரூபம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளது, வேறு யாரும் கவனம் பெறவில்லை. முதலில் எனக்குஅணு விதைத்தப் பூமியிலேபாடல் தான் ரொம்ப பிடித்தது, அந்தப் பாடலின் இசை என்னிடம் பேசுகிறது, ஏதோ கேட்கிறது. இப்போதுஉன்னை காணாதபாடலை காட்சியாகப் பார்க்கும்போது ரொம்ப பிடித்தமான பாடலாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டக் காட்சி பல இடங்களில் நம்மைப் பாதிக்கும். VISUAL LANGUAGE படத்தில் பல இடங்களில் பேசுகிறது.
உதாரணமா :
கமல் திவீரவாதிகளிடம் சிக்கும் போது, தண்ணீர் சொட்டு சொட்டாக விழும், அது பார்வையாளர்களிடம் அழுத்தமாக பதிகிறது. மிகப்பெரிய விஷயம் நடக்கப் போகிறது என்ற உணர்வை உணர்த்துகிறது.
மம்மூ (இளம் ஜிகாதி) அவன் ஊஞ்சலில் ஆடும்போது மிகவும் ரசித்து ஆடுவான், பின் அவன் உடல் சிதறி இறந்த பின் அதே காட்சி மீண்டும் ஓடும்.
பாடல்கள் அனைத்தும் கமல் பாடியது போலுள்ளது. பின்னணி இசை படபடக்க செய்கிறது. முதல் 40 நிமிடங்கள் கமலுக்காக படம் பார்க்கலாம். அதன் பின் கதையில் சர்வதேச அரசியலைப் பேசிகிறேனென்று கமல் தன் அறிவாளித் தனத்தை திரையில் காட்டியுள்ளார். ரஜினி, சல்மான் கான், ஷாருக் கான் போல் தன் வியாபாரத்தை நூறு கோடியாக உயர்த்த என்னென்ன செய்யாலாம் என்பதை விஸ்வரூபம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். படம் வெளியீடு பிரச்சினையின் போதுநான் நாட்டைவிட்டு வெளியேறுவேன்என்று கமல் சினிமாவில் வசனம் பேசுவதுபோல் அல்லது திரையில் நடிப்பது போல் நிஜ உலகிலும் நடிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். முதலில் DTH யில் வெளியாகுமென்று கூறினார், பின்னர் தியேட்டரில் வெளியானது. குழப்பமான மனநிலையில் இருந்திருக்கிறார் என்று புரிகிறது. பல்லாயிரம் தமிழர்கள் சாவுக்கு குரல் கொடுக்காத கமல் தன் படம் வெளியாகவில்லை என்பதற்காக எத்தனை நாடகங்களை நிகழ்த்தியுள்ளார். தன் படங்களில் பெரும்பாலும் மதம் அல்லது ஜாதி அடையாளங்களை முன்வைக்கிறார் கமல். கேட்டால் கதைக்கு தேவைபட்டது என்கிறார். இதை எங்கே போய் சொல்வது. இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து காப்பாற்றவே நம் நாடு அரசியல்வாதிகள் திண்டாடி வருகிறார்கள். சீனா குண்டு போடுமா இல்லை பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா என்ற பயத்தில்தான் ஆட்சியே நடக்கிறது. போர் வந்தாலும் எதிர்த்து சண்டை போட குண்டுகளில்லை என்கிறார்கள், ஹெலிகாப்டர் ஊழல் என்கிறார்கள், ஒன்னும் புரியல. இதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மற்ற மாநிலங்களில் இல்லை, இவர்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. இனி படம் எப்படி எடுக்கவேண்டுமென்று மதத்தலைவர்கள் அல்லது ஜாதித் தலைவர்கள் இயக்குனர்களுக்கு டியுசன் எடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். எப்படியோ கமல் போட்ட காசை எடுத்துவிட்டார். இனி அவருக்கு கவலையில்லை. தன் ஒவ்வொரு படத்திற்கும் சர்ச்சைகள் மூலமாக ஈஸியான விளம்பரத்தைப் பெற்றுவிடுகிறார், படமும் ஒடுகிறது. இது என்ன இஸம்?. தெரிந்தால் சொல்லவும்.

No comments:

Post a Comment