அரானா பக்கம்

Tuesday 19 March 2013

இப்படிதான் நடக்கும்


(02/03/2013)
மணி 4.55 ஆச்சு நாந்தான் கடைசி ஆளாக டிக்கெட் எடுக்க நிற்கிறேன். 5.15 மணி மதுரை டூ செங்கோட்டை டிரெயின் கிளம்பிவிடும். டிக்கெட் எடுக்கலாமா இல்லை வேண்டாமா என யோசித்துக் கொண்டேயிருந்தேன். கடைசியில் கடைசி ஆளாக வரிசையில் நின்றேன். சரியாக 5.17 மணிக்கு டிக்கெட் என் கைக்கு கிடைக்கிறது. டிரெயின் இன்னும் கிளம்பல. கடைசி பெட்டியில் ஏறிக்கொண்டேன். டீ, வடை, சுண்டல், போளி என வந்துகொண்டிருந்தது. பின் தெரிந்தது டிரெயின் லேட். ஆனா எவ்வளவு நேரமாகுமென்று யாருக்கும் தெரியவில்லை. சொல்லமுடியாத கோபத்தில் இருந்தேன். யாரையும் அடிக்கவும் முடியாது, வேறென்ன செய்ய செல்லில் பாட்டுக் கேட்டு மனதை சரி செய்துகொண்டேன். அதன் பின்னும் டிக்கெட் எடுத்து சிலர் சாவகாசமாக வந்தார்கள். ஒரு போலீஸ்காரர் ஒரு பெண் போலீசுடன் கடலைப் போட்டுக்கொண்டிருந்தார். எங்க பெட்டியில் கல்லூரி மாணவர்களும் பெண்களும் இருந்தனர். மாறி மாறி சைட் அடித்து கொண்டும், கண்ணால் பேசிக் கொண்டுமிருந்தனர். எட்டு பாட்டு கேட்டுவிட்டேன், இன்னும் டிரெயின் கிளம்பவில்லை. அண்ணி அப்பவே சொன்னாங்கநாளைக்கு போலாம் ராஜான்னுசொன்னப் பேச்சே கேக்றதே இல்ல. ஒரு வழியாக 6.30 மணிக்கு டிரெயின் கிளம்பியது. அப்படியே வானத்தைப் பார்த்தேன், கிரிக்கெடில் சச்சின் சதம் அடித்தப் பின் வானத்தைப் பார்ப்பாரே அதே மாதிரி. கொஞ்சம் கூட்டமாகதானிருந்தது, என்ன செய்ய படியில் உட்கார்ந்து கொண்டேன். மெல்ல மதுரையைத் தாண்டி போய்கொண்டிருந்தோம். பம்பாய் படத்திலிருந்துகுச்சு குச்சு ராக்கம்மா பொன் வேன்னும்பாட்டு கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும் உட்கார்திருந்தேன். டிரெயின் திருப்பரங்குன்றம் வந்தது, அங்கேயும் பயணிகள் அதிகம். அவர்கள் முகத்திலும் கொலைவெறியைப் பார்த்தேன். வண்டி திருமங்கலம் வரும்போது 10 நிமிஷம் நின்றது, ஏனென்றால் கிராசிங். கள்ளிக்குடி வந்தது, மீண்டும் கிராசிங். ஆனந்த விகடனில(06.03.2013) எழுத்தாளர் தாமிரா எழுதியசெங்கோட்டை பாசஞ்சர்என்ற சிறுகதையைப் படிக்கத் தொடகிங்னேன். அது ஒரு காதல் கதை, படித்தவர்களுக்கு தெரியும். கதையைப் படித்துவிட்டு ஏதோ யோசனையிலிருந்தேன். விருதுநகர் ரயில் நிலையம் வந்தது. இரண்டு நிமிஷத்தில் கிளம்பியது, அடுத்த பத்து நிமிஷத்தில் திருத்தங்கலில் இருப்பேனென்ற சந்தோஷத்திலிருந்தேன். விருதுநகரைத் தாண்டும்போது தீடீரென்று வண்டி நின்றுவிட்டது. என்னக் கொடுமடா இதுசிக்னலும் விழவில்லை அப்பறம் என்னதான் ஆச்சுன்னு தெரியல. போலீசுகாரர்கள் இரண்டு பேர் என்னாச்சு என்று பார்க்கப் போனார்கள். பெண் ஒருவர் டிரெயின் முன்னாடி விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். இஞ்சின் டிரைவர் பார்த்ததால் வண்டியை நிறுத்திவிட்டார். கை, காலகள் துண்டு துண்டாக இருந்ததாம், பார்த்தவர்கள் சொன்னார்கள். அப்படியே என் ஆசையும் துண்டு துண்டுனாது. இந்த டிரெயிலதான் விழுனுமா எத்தன சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வருது அதுல விழக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டேன். சாவு என் அருகில் நடந்தது. தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு இப்ப உள்ள ஆண்களும் பெண்களும் தயங்குவதில்லை. தற்கொலை ஈஸியான ஒரு ஹோம் ஓர்க் என்று நினைக்கிறேன். டிரெயின் அரை மணிநேரம் லேட் என்று ஒருவர் சொல்ல, நாம் என்ன செய்ய. ஆனால் 10 நிமிஷத்தில் எடுத்துவிட்டார்கள். வீட்டிற்கு வந்தவுடன் அப்பா அம்மாவிடம் சொன்னேன். முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி உண்டானது. அடுத்தநாள் காலையில் அந்தப் பெண் செய்தியாகிருந்தாள்.
எல்லோரும் நினைப்பது போல் தற்கொலை முடிவல்ல, ஆரம்பம். சமீப காலமாக தற்கொலையின் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது. அமீபா போல இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னை வடிவமைத்துக்கொள்கிறது. மனிதனைத் தூண்டி அவன் உயிரில் விளையாடுகிறது. தற்கொலையை யாராலும் தடுக்க முடியாது, முடிந்தால் முயற்சி செய்யலாம். தற்கொலை ஒரு பரவும் நோய். குணப்படுத்தவும் முடியாது பரவாமல் தடுக்கவும் முடியாது. இந்த நோய்க்கு மருந்து கிடையாது. தற்கொலை நோயிலிருந்து தப்பித்துதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

No comments:

Post a Comment