அரானா பக்கம்

Tuesday 19 March 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 10


(இரவு 18/03/2013 – 19/03/2013 காலை)
இரவு 11 மணிக்கு கரண்ட் கட். தூக்கமே வாராமலிருந்தேன். 12 மணிக்குதான் கரன்ட் வந்தபிறகுதான் தூங்கினேன். ஆனால் கனவே வரவில்லை. இயக்குனர் பாலா போட்டியாக நான் இயக்குனர் ஆனேன். அவர் படத்திலிருக்கும் கதாப்பாத்திரங்கள் போல் என் படத்திலும் கொண்டுவந்தேன். நாவலைப் படமாக எடுத்தேன். அது எந்த நாவல் என்று கனவில் தெரியவில்லை. விருதுகளில் எனக்கும் பாலாவுக்கும் போட்டியிருந்தது. கடைசியில் என் படம் விருதைத் தட்டிச்சென்றது. எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள், இயக்குனர் பாலாவும் தான். என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்.  கனவு வரவில்லையென்று எழுதினான் பின் எப்படி என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். காலை 6 மணிக்கு தான் இந்த கனவு வந்தது. அதெப்படி உனக்கு தெரியும் என்கிறீர்களா? 6 மணிக்கு கரண்ட் கட். முழிப்பு வந்துவிட்டது, 6 மணியிலிருந்து 7 மணி வரை அரை தூக்கத்திலிருந்தேன். காலையில் வரும் கனவு பழிக்குமென்று சொல்வார்கள், பார்ப்போம்.
பரதேசி படத்தின் பாதிப்பு என்னை விட்டு இன்னும் அகலவில்லை. கனவிலும் வந்து எனக்கு தொல்லைக்கொடுக்கிறது. நான் எழுதும் இந்தப் பகுதியை படிக்கும் நீங்கள் இவன் ஒரு பொய் சொல்லி என்று நீங்கள் நினைக்கலாம். நாம் நினைக்காத ஒன்றுதான் கனவு. நிறைய கனவுகளை எழுந்தவுடனே மறந்துள்ளேன். ஞாபகசக்தி எனக்கு கம்மிதான், இருப்பதை மட்டும் எழுதுகிறேன்.
(இன்னும் கனவுகள் வரும்)  

No comments:

Post a Comment