அரானா பக்கம்

Sunday 3 March 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 9


(மதியம் 25/02/2013)
இதுவரை எனக்கு வந்த கனுவுகளை மட்டுமே எழுதினேன். இப்ப எழுதுப்போவது எங்க அம்மாவுக்கு வந்தக் கனவு. காலையிலிருந்து கோலம் போடுவது, அப்பாவுக்கு சுகர் என்பதால் அவருக்காக கோதுமை உப்பா, சப்பாத்தி செய்வது, மதிய சாப்பாடுக்கு ரெடியாவது என வேலையிலிருந்து அம்மாடுக்கு ரெஸ்ட் கிடைப்பது மதியம் தூங்குவதுதான். 2 மணியிலிருந்து 6 மணி வரை கரன்ட் இருக்காது. ஜன்னல் வழியாக காற்று நன்றாக வரும். அதனால் இதமாக குட்டி தூக்கம் போடலாம். அப்படி தூங்கும்போது…..
எங்கள் வீட்டிற்கு நம் நாட்டின் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும், காங்கரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்களும் வந்திருந்தார்கள். அப்பா மின்சார துறையில் வேலை செய்வதால் பிரதமர் அத்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். சோனியா காந்தி அவர்கள் அம்மாவிடம் தனிமுறையில் பேசியுள்ளார்கள். அது மட்டுமில்லை எங்க அம்மா வளையலுக்காக ஒரு பெட்டியே வைத்திருக்கிறார்கள். அதில் சில வளையல்களை சோனியா காந்தி கேட்டார்களாம், அம்மாவும் கொடுத்திருக்கிறார்கள்.
இதை என்னிடம் அம்மா சொல்லும் போது முகத்தில் அப்படியொரு பெருமை கலந்த சிரிப்பு. பிரதமரும் சோனியாவும் நினைத்தால் கூட இப்படியொரு சம்பவம் நடக்காது. ஏன் இப்படியெல்லாம் கனவு வருகிறது என்று நினைக்கலாம், எப்படியும் கனவு வரும் என்பதை இந்தக் கனவு நிரூப்பித்துள்ளது.
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment