(இரவு 11/02/2013 – 12/02/2013 காலை)
11.30 மணி
வரை படித்துக்
கொண்டிருந்தேன். பின் தூங்கலாமென்று
கண்களை மூடினேன்.
5 நிமிஷம்
கழிச்சு ஒரு சத்தம்
கேட்டது, என்ன என்று
பார்த்தால்
எங்க அம்மா
எலியை அடிக்க விரட்டிக்
கொண்டுருந்தார்.
அந்த ஆட்டத்தில்
நானும் சேர்ந்து கொண்டேன்.
மூன்று முறை என்னிடமிருந்து
தப்பி நான்காவது
முறை என்னிடம்
சிக்கி சிதைந்தது.
அதை எடுத்து
வெளியே கொண்டுபோய்
எறிந்தேன்,
நாய் ஒன்று
அந்த செத்த
எலியை கவ்விக் கொண்டு இருட்டில்
மறைந்தது.
எங்க அம்மாவுக்கு
தூக்கம் வரவில்லை, என்ன ஆச்சுன்னு
கேட்டேன்.
எலியின் நகம் அம்மாவின்
காலில் ஒரு சின்னக்
கீறலை ஏற்படுத்திவிட்டது.
அம்மாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது, கீறல் பட்ட
இடம் நமச்சலாகிறது,
வீங்கியிருக்கிறது
என்கிற புலம்பல்களோடு
12 மணிக்கு தான் தூங்கப்
போனோம்.
இந்தக் கனவு
முழுக்க 5 என்ற எண்ணைக்
குறிப்பதாக
இருந்தது. நாங்க ஐந்து பேர் ஒரு
பெண் உட்பட.
நாங்கள் களப்பணியாளர்கள்.
எங்கே இயற்கையை
வாழவைக்கும்
மனிதர்களைத்
தேடி அவர்களுடைய
வாழ்வை எடுத்துக்காட்டுவது
தான் எங்கள்
பணி. அந்தக் கிராமத்துக்கு
போனோம், கிராமத்தின்
பெயர் நினைவில்லை.
கிராமத்தில் ஐந்து வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
அங்கே எல்லோரும்
ஐந்து மணிக்கு எழுந்திருக்க
வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள்தான்
அங்கே விவசாயிகள்.
முழுக்க முழுக்க
விவசாயத்தை
நம்பி வாழும் கிராமம். எல்லோருக்கும் நாத்து
நடுவதிலிருந்து
அறுவடை வரை தெரிந்திருந்து.
பசுமையான நிலம், சுத்தமான சுவாசம், நல்ல மனமுள்ளவர்கள்
நிறைந்த மக்கள்.
(இன்னும்
கனவுகள் வரும்)
No comments:
Post a Comment