(இரவு 10/02/2013 – 11/02/2013 காலை)
இரவு முழுக்க
கனவு வரவில்லை. காலை ஆறு மணிக்கு கரண்ட் போச்சு, பின் பெட்ரூமில்
படுத்தேன்.
தூக்கம் சுண்டிழுத்தது.
கனவுலகில் நுழைந்தேன்.
அது கல்லூரி
மைதானம். புது வருடக்
கொண்டாட்டம்.
மாணவர்கள், மாணவிகள்
என அனைவரும்
அங்கே மகிழ்ச்சிக்
கடலில் குளித்துக்
கொண்டுருந்தோம்.
எங்கள் துறையில்
மட்டும் பெண்கள் இருந்தார்கள்.
அவர்களும் அழகு தான். வண்ணத்தாள் தோரணைகள்,
வெடிச்சத்தங்கள்,
கத்தல், கைத்தட்டல்
என ஒரே
ஆர்ப்பாட்டமாயிருக்கிறது.
என் நண்பன்
ஒருவன் வீட்டிலிருந்து
வறுத்தமீன்களைக்
கொண்டுவந்தான்.
எல்லோருக்கும் அது பிடித்திருந்தது.
ஆளாளுக்கு நாலு மீனை சாப்பிட்டோம்.
அப்போது ஒரு வெடி எங்கள்
மீது வந்து
வெடித்தது.
எல்லோரும் ஒரு நிமிஷம் சண்டைக்கு
தயாரானோம்,
ஆனால் எல்லாக் கோபமும் வெடிச் சத்தம் போல் காணாமல்
போனது. பின் அவர்களுடன்
சேர்ந்து
ஆட்டம் ஆரம்பம்.
12 மணிக்கு
ஒரே நேரத்தில்
எல்லோரும்
‘HAPPY NEW YEAR’ என்று கத்தினோம்.
ஆட்டம் தொடர்ந்து
கொண்டேயிருக்க….
எனக்கு துயிலானது.
(இன்னும்
கனவுகள் வரும்)
No comments:
Post a Comment