அரானா பக்கம்

Sunday, 3 March 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 5


(இரவு 07/02/2013 – 08/02/2013 காலை)
மின்சாரம் இல்லை என்பதால் இரவு 12 மணி வரை விழித்துக் கொண்டுருந்தேன். எனையறியாமல் தூங்கியிருக்கிறேன்.
வெளிநாட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுதான், இப்பொழுது நம் நாட்டிலும், நம் ஊரிலும், இந்தக் கனவிலும். அமெரிக்கவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் இந்தக் காட்சி வரும்.
கல்லூரிப் படிக்கும் பெண் ஒருத்தி காதல் வலையில் விழுந்துவிடுகிறாள். எமி ஜாக்சன் மாதிரி அழகானப் பெண். காதலன் ஒவ்வொரு நாளும் அவளுக்கு எதாவது பரிசு கொடுத்துக் கொண்டேயிருப்பான். ஒரு நாள் அவளுக்கு பிறந்தநாள், சரியா 12மணி அவளை வாழ்த்த வேண்டுமென்று அவள் வீட்டிலேயே தங்கிவிட்டான். அவள் தூங்கிவிட்டாள், இவன் விழித்துக்கொண்டேயிருந்தான். 12 மணிக்கு அவளை எழுப்பி கேக் வெட்டி வாழ்த்துச் சொன்னான். அவன் அன்பில் மயங்கியவள் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள்.
அவன் அவளுடைய ஆசிரியர்.
இன்னொரு கனவு வந்தது
மிகப் பெரிய மைதானம், அதில் நானும் என் நண்பர்களான மதி மற்றும் மாணிக்கம். அங்கே எங்களுடன் ஒரு பெண், இவளும் அழகுதான். பேரழகி என்ற சொல்லுக்கு அர்த்தமானவள். நன்றாக தரையில் பட்டு எழும்பும் பந்தை நாங்கள் மேலே தூக்கிப்போட்டு விளையாடுகிறோம். எங்களுக்குள் சண்டை, யார் பந்தைப் பிடிப்பதற்கில்லை, யார் அவளை பிக்கப் செய்வதில். கடைசியில் யாருமில்லை…
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment