அரானா பக்கம்

Sunday, 3 March 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 4


(இரவு 31/01/2013 – 01/02/2013 காலை)
’அவுட் லேண்டர்’ ஹாலிவுட் படத்தில் ஒரு வினோத மிருகத்தை அல்லது டைனோசரை கிராஃபிக்ஸ் மூலமாக உருவாக்கியிருப்பார்கள். அந்த மிருகத்தை தீயாலும் கொள்ள முடியாது துப்பாக்கியாலும் கொள்ள முடியாது. விசித்திரமான உருவமைப்பிலிருக்கும், மக்களைக் கடத்திச் சென்று குகையில் அடைத்து வைத்திருக்கும். படத்தின் முடிவில் கதாநாயகன் வந்த விமானத்தின் ஒரு பகுதியை வாள் போல் செதுக்கி அந்த மிருகத்தை கொள்வார்.
இப்படி மிருகம் தான் கனவில் வந்தது. யாராலும் கொள்ள முடியவில்லை, உடனே நான் அந்த மிருகத்தைக் கொள்வேன் என எழுதவேனென்று எதிர்பார்க்க வேண்டாம். எல்லோரும் போல நானும் பயந்து ஓடி ஒளிந்து கொண்டுயிருந்தேன். யோசிக்க யோசிக்க எங்களில் ஒருவர் ஒருவராய் காணாமல் போனார்கள். பயத்தோடும் சோகத்தோடும் நாட்கள் கழிந்தது. எங்களைக் காப்பாற்ற எந்த சூப்பர் ஹீரோவும் வரவில்லை. என்னையும் ஒரு நாள் துரத்தி வந்தது, ஆனால் இன்னொருவன் அதனிடம் சிக்கி உயிர்விட்டான்.
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment