(இரவு 30/01/2013 – 31/01/2013 காலை)
தூக்கத்தின் எல்லை
வரை போன
மாதிரி ஒரு FEELING. சரி
கனவில் நிகழ்ந்தவை….
நாங்கள் கடலில்
வாழும் இனம். உப்புநீரைக் குடிக்கவும்
குளிக்கவும்
உரிமையுள்ளவர்கள்.
சுதந்திரம் என்றால்
என்ன? கேள்விக்கு பதில் தெரியாது, வாழத் தெரிந்தவர்கள்.
எங்கள் ஆடைகளும்
கடல் நீராலானது,
மொழியும்
கடல் மொழி.
ஒவ்வொரு நாளும்
கடல் தான்
சூரியனையும்
எங்களையும்
எழுப்புகிறது.
நீருக்கு அடிமையாக
இருந்தோம்.
எங்களைச் சுற்றி
சிறு சிறு
நிலப்பரப்புகள்
மட்டுமேயிருந்தது.
மீன்களை எங்களைத்
தேடி வரும்.
அப்போது தீடீரென்று
கடல் எழுந்தது,
நான்தான்
முதலில் பார்த்தேன்,
அனைவரும்
ஆச்சர்யம்
கலந்த அதிர்ச்சியில்
உறைந்து நின்றோம்.
எங்களை நோக்கி
விரைந்து
வந்தது. ஆனால் யாரும்
பயந்து ஓடவில்லை.
கடல் உடன்பிறவா
சகோதரன் என்ற திமிரில்
நின்றோம்.
அதன் விளைவாய்
எங்கள் மக்களில் சில பேரை
காணவில்லை,
அதில் என் தாயும்
ஒருவர். ஒரு விண்கலம்
கடலுக்கடியிலிருந்து
மேலே வந்தது.
நாங்கள் பயந்து
சிதறி ஓடினோம். பின் நடந்தவற்றை
மறந்துவிட்டேன்.
ஏன் மறந்தேன்
எதற்காக மறந்தேன் என்றக் கேள்விகள்
மனதுள் ஓடுகிறது.
(இன்னும்
கனவுகள் வரும்)
No comments:
Post a Comment