அரானா பக்கம்

Wednesday, 19 December 2012

மூன்றாவது கதை



மூன்றாவது நபர் மூலமாகத்தான் இந்தக் கதை சொல்லப்படுகிறது.
வீட்டில் யாருமில்லை
வீட்டுக்குள் எலி வந்ததால் எல்லோரும் தீவிரவாதியைப் பிடிப்பது போல் தீவிரமானார்கள். பழைய சாமான்கள் எங்கள் வீட்டில் அதிகம், அம்மாகிட்ட எவ்ளோ சொன்னாலும் கேட்கமாட்டாங்க. ஆனா இப்ப தன்னோட கடைசி மகளுக்கு (ராதிகா) கல்யாணம், வீட்ட சுத்தம் செய்யும்போதுதான் இந்த எலியைக் கண்டுபிடிச்சோம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பல சண்டைகள் அரங்கேறி முடிஞ்சுபோச்சு. அப்பா வீட்டில் இருந்தாலே அம்மா எதுவும் பேசமாட்டாங்க, அப்பா வந்தா சாப்பாடு போடுவாங்க, அப்பா அலமாறியில் காசு வச்சுடு போயிடுவார். அம்மாவோட அண்ணன் பையனுக்கு தான் ராதிகாவை கொடுக்கப்போறாங்க, இந்தக் கலயாணத்துல எல்லோருக்கும் சம்மதம் தான். அம்மாவுக்கு வீட்ல இருந்த ஒரே பேச்சுத் துணை ராதிகா மட்டும்தான். இரண்டு பேருக்கும் சண்டையே வராது. இருவரும் மாறி மாறி பேன் பார்க்க போது பக்கத்து வீடுகளில் நடக்கும் சமாசாரங்களைப் பற்றிப்
எம்மா பக்கத்து வீட்டு ராஜிக்கு கொழந்த பொறந்திருச்சா?
நேத்துதான் பொறந்திச்சு ஆம்ப்ரேஷன்ல
கருப்பாதான் பொறந்திருக்கும் ஏம்மா?
ஆமா, ராஜி சிவப்பில்ல அவ மாப்பிள்ளையும் சிவப்பில்ல
பேசுவார்கள்,
சமையல் செய்யும்போது இருமனதாக இருப்பார்கள்
இன்னைக்கு என்ன கொழம்பு வக்கலாம்?
சாம்பாரு
நேத்துதானடி சாம்பார் வச்சோம்
அது ஒன்னுதான் நீ நல்லா வக்கிற
புளிக் கொழம்பு?
அது ஒனக்கு செய்யவே தெரியாது, ஏம்மா இப்படி கொடும படுதுற
அப்பண்ணா நீயே கொழம்பு வச்சுக்கோ
சரி போ
ஒண்ணா உட்கார்ந்து டிவியில சீரியல் பார்க்கும் போது சீரியல் வில்லகளை ஒழிக்கப் போராடுவார்கள்
திருமதி செல்வம் நாடகத்துல இந்த செல்வம் பண வந்தவுடனே மாறிட்டான்
எம்மா செல்வம் மட்டுமா நாதஸ்வரம் நாடகத்துலயும் தான்
இவிங்க எல்லாத்தையும் ஜெயிலப் புடிச்சுப் போடணும்.
இதெல்லாம் நாடகம் தானம்மா
இருந்தாலும் ஒரு பொண்ண இப்பிடியா கொடுமப் படுத்தறது.
மகன் இருந்தால் மருமகளுடன் பேசலாம் இப்போ... கல்யாணத்துக்கு பிறகு வீட்டில் யாருடன் பேசப் போகிறார். வீட்டிலிருந்த எலியையும் கொன்றுவிட்டார்கள். வார இதழ் படிக்க பிடிக்காது என்றில்லை விரும்பமாட்டாங்க. துணித்துவைக்கிறது, பாத்திரம் கழுவுவது வருடக் கணக்கில் செய்தாலும் அலுக்காது. உயிரில்லா டிவியில் மிச்சமிருக்கும் மின்சாரத்தில் பார்த்துக் கொள்வதோடு நாட்கள் ஓடிக் கொண்டிருக்கப் போகுது. பக்கத்து வீட்டுக் காரர்களுடன் எவ்வளவு நேரம் பேச முடியும்.
மணமகள் ராதிகாவுக்கு மணமகன் ரகுநந்தன் அவர்களுக்கு இன்று இனிதே கல்யாணம் நடந்து முடிந்துவிட்டது. பாலும் பழமும் கொடுத்து முடித்து மாமனார் வீட்டுக்கு சில கண்ணீர்த் துளிகளை சிந்தி அனுப்பிவச்சாசு. அம்மாவுக்கு இப்ப இரண்டு யோசனைகள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது, வீட்டில் தனியாக வாழக் கற்றுக் கொள்ளுதல்.
வீடு முழுக்க அமைதியும் மௌனமும் ஆட்கொண்டது. அப்ப அப்ப சமையல் செய்யும் சத்தமும், டிவி பார்க்கும் சத்தமும் உள்ளே ஒருவர் இருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.
இடைப்பட்ட நாட்களில் ராதிகா போன் செய்வாள் வழக்கமானக் கேள்விகள்
என்னமா நல்லாயிருக்கியா?
சாப்பிட்டியா?
என்ன சாப்பாடு?
மாப்ள எங்க?
வழக்கமான பதில்கள்
நல்லாயிருக்கேம்மா.
சாப்ட்டேன்.
காலைல தோசை, மதியம் சாம்பாரு.
அவரு எட்டு மணிக்கே ஆபிஸ் போயிருவாரு.
ஒரு நாள் கூர்க்கா காசு கேட்டு வந்தார். அவரிடம்
என்னப்பா நல்லாயிருக்கியா?
ஆ.
அப்பறம் சாப்டியா?
ஆ.காலைல
நைட்டு ஃபுல்லா கண் முழிச்சியா?
ஆமாம்மா.
உங்க சொந்தகாரங்க எல்லாரும் நேபால்லதான் இருக்காங்களா?
ஆமா.
கூர்க்காவுடன் பேசியதில் ஒரு ஐந்து நிமிஷம் போச்சு. அவருக்கு பத்து ரூபாய் நோட்டு கொடுத்தனுப்பினார் அம்மா. இப்படி தினமும் யாரும் வீட்டுக்கு வரப்போவதில்லை.
சில நேரங்களில் அம்மாவுக்கு தாம் புதுமணத் தம்பதியைப் போல் நினைத்துக் கொள்வார். அம்மாவின் செல்லப் பெயர் கிளி, இந்தப் பெயர் சொல்லித் தான் அப்பா கூப்பிடுவார். அப்பாவுடன் இருக்கும் கோபம் இன்னும் தீரவில்லை. வீட்டில் எதோ ஒன்று அம்மாவிற்கு துணையிருக்கிறது, பயமில்லாமல் இருக்கிறார். சொல்ல மறந்தது அம்மாவின் நிஜப் பெயர் ரேணுகா. இந்தப் பெயர் சொல்லி அப்பா கூப்பிட்டதும் கிடையாது, இனி கூப்பிடப் போவதுமில்லை.
கடைசியாக
வீட்டில் யாருமில்லை என நினைத்து, இப்போ இன்னொரு எலி புகுந்துவிட்டது.

No comments:

Post a Comment