’எப்போதும்
அச்சத்தில்
இருப்பதை
விட, ஆபத்தை
ஒருமுறை சந்திப்பது
மேல்’ – கோல்ட்
ஸ்மித்
இந்த வார்த்தைகளின்
உருவம் தான் PI.
ரொம்ப நாளாக
எதிர்ப்பார்த்தேன் ”லைஃப்
ஆப் பை”
படம் பார்க்க
வேண்டுமென்று.
நாவலைப் படித்ததில்லை,
ஆனால் படம் பார்க்க
ஆர்வமாகயிருந்தேன்.
அதுவும் 3டியில் தான்
என்று முடிவு செய்தேன்.
நினைச்ச மாதிரியே
3டியில் பார்த்தேன்.
அடுத்த அவதார்
படம், MIRACLE VISUAL என விளம்பரம்
செய்துயிருந்தனர்.
உண்மையிலே அடுத்த
அவதார் படமே தான்.
அந்த நாவலைப்
படமாக்க ஏகப்பட்டப்
பிரச்சினை
ஆனது, கடைசியாக
இயக்குனர்
திரு ஆங்
லீ ஒப்புக்கொண்டார்
என ஒரு
வாரப் பத்திரிகையில்
படித்தேன்.
எனக்கு எப்போதும்
படம் ஆரம்பிக்கும்
15 நிமிடங்களுக்கு
முன்னே திரையரங்கில்
உள்ளேயிருக்கணும்.
லைஃப் ஆப் பை படம்
தொடங்கியபோது
தான் நான்
உள்ளே சென்றேன்.
Directed by Ang lee அப்போது திரையரங்கில்
உட்கார்கிறேன்.
பின்னணிக் குரலில்
படம் ஆரம்பமாகி
இருந்தது.
ஆனால் தப்பான
ஆள் கூடப்
பார்த்தேன்.
என் மாமா வுடன், பேசிக்கிட்டேப்
படம் பார்த்தார்.
எனக்கு எந்தப்
படம் பார்த்தாலும்
அமைதியாக
பார்க்கவேண்டும்.
பை- யின் பெயர் காரணம்
முதல் புலி காட்டுக்குள்
செல்லும்
வரை ரசித்து
ரசித்து படம் பார்த்தேன்.
ஒவ்வொரு காட்சியும்
உணர்வு பூர்வமாக காட்சிப் படுத்தியுள்ளார்
இயக்குனர்.
3டி காட்சிகள்
கண்களுக்கு
ஆச்சர்யங்களைக்
கொடுக்கிறது.
இயக்குனர் ஆங் லீ- யின்
நேர்காணல்
விகடனில்
படிக்கும்
பல கலாச்சார
வாழ்க்கையில்
பயணப்பட்டிருக்கிறார்.
தாய்வான், சீனா மற்றும் அமெரிக்கா
போன்ற நாடுகளில்
வாழ்ந்தாலும்
அந்நியனாக
உணர்கிறேன்
என்கிறார்.
’எல்லாப்
படங்களையும்
எல்லோருமே
பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது
பேராசை’ எனக்கு மிகப் பிடித்தமான
வாக்கியம்.
நம் நாடு இந்தியா-வைப்
பற்றி மிகத் தெளிவாக
புரிந்துவைத்துள்ளார்
இயக்குனர்
ஆங் லீ.
கடல் உயிர்களை
இலவசமாக வாங்கும் வால்மார்ட்.
கடல் மிகப் பெரிய சமாதியை
கொண்டுள்ளது.
இன்னும் பசி அடங்கவில்லை
போலும்.
படத்தில் எனக்கு
ரொம்ப பிடித்தக்
காட்சிகள்
1. புலியின் அறிமுகம்
2. மூன்று மதங்களையும்
ஒருவன் பின்பற்ற முடியாது என்று விளக்கிச்
சொல்லும்
பை-யின் அப்பா
3. கடலில் கப்பலின்
விபத்து
4. பை தப்பி
வந்தப் படகில் புலி ஏறுவது
மற்றும் அவனை மிரட்டுவது.
5. பை கடல்
நீரை கைகளால்
தடவும்போது
கடலுக்கடியில்
மிகப் பெரிய திமிகலங்கம்
மீன் தாவிக்
குதிப்பது.
6. இறுதியில் பை
காவல்துறை
அதிகாரிகளுக்கு
வேறொரு கதை சொல்வது.
தத்துவங்கள் பல
நேரங்களில்
வாழ்க்கையைத்
திசை மாற்றும்
இல்லையென்றால்
உணர்த்தும். கடவுள் நம்பிக்கை
படத்தில்
ஓங்கியுள்ளது,
விதிப் படி நடப்பது
விதிதான்.
சின்னப் பொருட்களின்
மீது ஆசை
அதிகரித்துவிட்டது.
நொடிகளில் தவறவிட்ட
சந்தோஷங்களை
மீட்டெப்பது
கடினம் தான், அடுத்த
நொடியில்
இழந்ததை விட அதிகம்
பெறமுடியும்.
பை நம்மில்
ஒருவன் தான், அனுபவசாலி. வாழ்க்கை நமக்கானது,
அதை இன்னொருவர்
வாழமுடியாது
திருடவும்
முடியாது.
படம் பார்த்துவிட்டு
வண்டியில்
வந்துகொண்டுருந்தோம்,
மணி இரவு
9 இருக்கும்
ரோட்டில்
நாய் ஏதோ
வண்டியில்
அடிப்பட்டு
குடல் சிதறி செத்துக்
கிடந்தது. உலகத்தில்
எந்த உயிரும்
நிம்மதியாக
வாழமுடியாது.
No comments:
Post a Comment