அரானா பக்கம்

Wednesday, 19 December 2012

அரானாவின் மூன்று நெடுங்கவிதைகள்



முத்தமிடுவதற்கான
காரணத்தை
சொல்லிவிட்டு போ
கோபப்படுவதற்கான
காரணத்தை
சொல்லிவிட்டு போ
சில முத்தங்கள்
சில கோபங்கள்
பிரியங்களாக
நங்கை
மங்கை
பெண்
ஒருத்தி
நாணங்கள்
வெட்கங்கள்
உன்னிடம்
தேடுகிறேன்
சிலிர்க்காத உடல்கள்
சிரிக்காத உதடுகள்
முகமூடிகளாக
அடம்பிடித்து
அடம்பிடித்து
அடங்கிப் போகிறேன்
ஒன்றோடு
ஒன்று
இரண்டாகிறது
வார்த்தைகள் இல்லை
வாள்கள் இல்லை
போர் நடக்கும்
வெளிச்சங்கள் மிருதுவான அளவு
சத்தங்கள் மிச்சமிருக்கும் அளவு
ஏன்
எதற்கு
எப்படி
கேள்விகள்
மௌனங்களாக
வருடும் காற்று
வருடும் இசை
வருடும் விரல்கள்
ரேகைகள் மறையக்கூடும்
தருணம் பார்த்து
காலம் பார்த்து
நடக்கிறது
கொஞ்சல்கள்
சிணுங்கல்கள்
உதிர்ந்த பூக்கள்
உதிர்ந்த துளிகள்
தேகம் மறுக்கும் நேரம்
நேரம் தெரியாத நேரம்
அறையெங்கும்
கண்கள் பார்ப்பதாய்
காதுகள் கேட்பதாய்
உணர்ந்தோம்
முத்தம் கொடுக்க கற்றேன்
கரங்கள் ஊறக் கற்றேன்
கற்றல் சுகமானது

*
மூடியிருக்கும் கதவுகள்
திறப்பதற்கு சாவியில்லை
என்னைப் போன்றவர்களுக்கு
அனுமதியில்லை
தட்டினாலும்
கேட்காதக் கதவுகள்
கேட்காத அறைகள்
முகவரி தொலைத்தவர்கள்
முகவரி தெரிந்தவர்கள்
சூரியன்
நிலா
நட்சத்திரங்களுடன்
நாட்கள்
பொழுதுகள்
சுவடு
இல்லாத
நடைபாதை
நிழல்
இல்லாத
நிலம்
மழைக் காலம்
வெயில் காலம்
தோழர்கள்
தொடக்கப் புள்ளி
நிறங்களாக
இடைப் புள்ளி
கலகமாக
முற்றுப் புள்ளி
குறிகளாக.

*
கண்கள்
கனவுகளைத்
தேடுகிறது
புது உலகம்
புது மனிதர்கள்
புது மொழி
பூதங்களுடன் நட்பு
காதலியை மீட்பு
சாகசங்களும்
மர்மங்களும்
தொடர்கதைகளாக
மறந்து போன கனவுகள்
நினைவிருக்கும் கனவுகள்
தொடர்பில்லா கம்பிகள்
உண்மை
பொய்
பிம்பங்களாக
விழிகளுக்கிடையே
வார்த்தைகளில்லை
காட்சிகளில்லை
கற்பனைகளில்லை
சரி
தவறு
பேதமில்லை
இரவுலகம்
தனிமையானது
யாருமில்லா
சந்திப்பு
நேயரில்லா
நேர்காணல்
பக்கங்களில்லா
புத்தகங்கள்
பார்வையாளர்களில்லாத
நடனங்கள்
நாடகங்கள்
எந்நேரமும்
எந்நாளும்
எங்கேயும்
கனவில்லாத
இரவுகளைக்
காண
ஆவலோடுயிருக்கிறேன். 

No comments:

Post a Comment