யானையை விரட்டும்
யானை
’கும்கி’
படத்தை முதல் நாளே
பார்ப்பேனென்று
எதிர்ப்பார்க்கவில்லை,
தீடீரென்று
படத்துக்கு
கிளம்பிவிட்டேன். படத்தின் பாடல்கள்
படத்தை பார்க்கத்
தூண்டியது
எனலாம். ’அய்யய்யோ
ஆனந்தமே’ பாட்டு கேட்கும்போது
எனக்குள்
’தீ’ பற்றிக்கொள்ளும்,
அப்படி ரசித்துக்
கேட்டேன்.
திரு. யுகபாரதியின் வரிகள்
மனிதர்களைக்
காதலிக்கத்
தூண்டும்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன்
தியேட்டரில்
உட்கார்ந்தேன்.
ஸ்கூல் பசங்க நிறையப் பேர் இருந்தார்கள்.
காட்டு யானையை
விரட்ட பயிற்சி கொடுத்து வளர்க்கப்படும்
யானையின்
பெயர் ’கும்கி’ யானை. காதலால் எற்படும்
விபரீதங்களை
யானைக் கொண்டு திரைக்கதையை
சுவாரசிமாக
நகர்த்தியுள்ளார்
இயக்குனர்
திரு பிரபு
சாலமன். கொம்பன் யானையின்
அறிமுகத்தில்
தியேட்டரே
ஒரு நிமிஷத்தில்
ஆடிப் போனது, படத்துக்கு
சரியான வில்லன். தம்பி ராமையாவின்
வசன உச்சரிப்பே
சிரிப்பை
வரவழைக்கிறது.
LOCATION ஒவ்வொரு
காட்சிக்கும்
கண்களுக்கு
ஜில்லென்ற
உணர்வை ஏற்படுத்துகிறது.
சுகுமார் மிகச்சிறந்த
ஒளிப்பளிவாளர்
என நிரூபித்துள்ளார்.
தேவைக்கேற்ற நடிப்பை
மட்டும் வெளிப்படுத்தியுள்ளனர்
விக்ரம் பிரபுவும்
லஷ்மி மேனனும். க்ளைமாக்ஸ் காட்சியை
இன்னும் மிரட்டலாக
எடுத்திருக்கலாம்
CG அப்பட்டமா
தெரியுது.
கொம்பன் யானையையும்
படத்தில்
இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
வணிகரீதியாக படம் வெற்றி அதில் எந்த
மாற்றமுமில்லை.
தென் மாவட்ட
மக்களுக்குப்
பொறுத்தவரைப்
படம் சூப்பர்.
சொய் சொய்ங்
பாட்டுக்கு
தியேட்டரே
ஆடியது. பண்பாடு, பாரம்பரியம்,
நாகரிகம்
இன்னும் மக்களிடமிருக்கிறது,
அதை மறைத்து
வைக்கலாமே
தவிர அழிக்க முடியாது.
மைனா- வின் பாதிப்பு படத்தில்லாமல்
இல்லை.
***
காதலர்களின் பொன்வசந்தம்
”நீதானே
என் பொன்வசந்தம்”
படம் பார்த்தால்
ஒன்று காதல் வரும்,
இரண்டு காதல் புரியும். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனு-க்கு
இவ்வளவு காதல் ரசனை
இருக்கக்
கூடாது. ஒவ்வொரு ஷாட்-லையும்
ரசனைகள்.
வசனங்களும் ராஜாவின்
பாடல்களும்
உருக வைக்கிறது.
முழுக்க முழுக்க
காதலர்களுக்கானப்
படம். காதல் கதை
என்று சொல்வதை விட ’காதல்
கலை’ என்று
சொல்லலாம்,
அந்தளவுக்கு
அருவி மாதிரி, கடல் மாதிரி,
வானம் மாதிரி, படத்தில் காதல் கொட்டுகிறது,
பொங்குகிறது,
மிகப் பெரியதாக இருக்கிறது.
சந்தானம் ரொம்ப ரொம்ப அழகாக
இருக்கிறார்.
இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள்
இதற்கு மேல் இன்னொரு
காதல் படம் எடுக்கவேண்டாம்.
இரண்டு ஒளிப்பதிவாளர்களும்
ஒருசேர காவியக்காரர்கள்.
காதலின் உளவியலை
காதலர்களின்
ஊடல்களுடன்
மோதவிட்டு
விளையாடியுள்ளார்
இயக்குனர்.
ராஜாவின் CLASSICAL இசையுடன்
நா. முத்துக்குமார் வரிகள்
கொஞ்லாக, கெஞ்சலாக, தூண்டலாக வருடுகிறது.
முழுக்க முழுக்க
’ஏ’ சென்டர்
ஆடியன்ஸுக்கானப்
படம். ஆனால் காதல் எல்லா ஆடியன்ஸுக்கும்
ஒன்றுதான்.
விண்ணைத் தாண்டி
வருவாயா படம் பார்த்தபோதிருந்த
அதே உணர்வு
அதே காதல்,
காதல் போரடிக்காது
ஆனால் திகட்டிவிடும்.
இரண்டு படங்களும்
ரசனை உணர்வு
மிக்கப் படங்களே. ’கும்கி’ பிரபு சாலமன்
ஸ்டைல், ’நீ தானே
என் பொன்வசந்தம்’
கௌதம் டச்சு.
நான்கு உயிர்
ஓர் உணர்வு
இரண்டு படம்
ஓர் உணர்வு
No comments:
Post a Comment