அரானா பக்கம்

Wednesday, 19 December 2012

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 2



(இரவு18/12/2012 – 19/12/2012 காலை)
இரண்டு கனவுகள்
I எங்க மாமாவுடன் குடும்பத்தோடு வெளியூர் போயிருக்கிறோம், எந்த ஊரென்று தெரியவில்லை. பெயர் தெரியாத ஊருக்கு போக இரவு ஏழு மணியாச்சு. ஒரு வழியா ஹோட்டல்ல ரூம் புக் பனண்ணியாச்சு. எல்லோரும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரூமுக்கு நடந்து கொண்டுருந்தோம். அப்போ அதே ரூமில் ஒரு பெண் வேகமாக ரூமை காலி செய்து போய்விட வேண்டுமென்று கிளம்பினார், பார்ப்பதற்கு வெளிநாட்டு பெண் காட்சியளித்தார். எதோ ஒன்று அவரை பயமுறுத்தியிருக்கிறது, தடுத்து நிறுத்திருக்கிறது. அந்தப் பெண் ரூமிலிருக்கும் கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டார். கதவு தானாக லாக்கானது, சரியாக நாங்களும் வந்துவிட்டோம். எங்களுடன் வந்தவர் சாவியை எடுத்து கதவைத் திறந்தார். எல்லோருக்கும் பயங்கர அசதி, நான் போனவுடன் கட்டிலில் படுத்துக் கொண்டேன். கட்டிலில் காந்தச் சக்தி இருப்பது போல் என்னை இழுத்துக் கொண்டுருந்தது. பின் சாப்பிடப் போனோம். மறுபடியும் கட்டிலில் படுத்தேன், என் மேல் யாரோ படுப்பது போலிருந்தது, எந்திரிக்க முடியாமல் எதோ செய்தது. சலனமில்லாமல் உருவமில்லாமல் யாரோயொருவர் அறையில் இருக்கிறாரென்று மட்டும் எனக்கு புரிந்தது.
க்ரைம் நாவல் எழுதும் திரு. ராஜேஷ் குமார் நாவலில் இப்படிதான் கதை ஆரம்பிக்கும். எனக்கும் அந்தக் கனவுக்கு முடிவு தெரியவில்லை. நாடகங்களில் வருவது போல தொடரும் என்று கனுவுகள் சொல்வதில்லை. இருந்தால் நல்லாயிருக்கும்.
II நான் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டுருப்பது தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகம் மங்கலாக இருந்தது. கண்ணீர் வரத் துடிக்கும் கண்கள், பேசத் துடிக்கும் உதடுகள், ஆனால் பேசாமல் நின்று அந்தப் பெண்ணைப் பார்த்துகொண்டுருந்தேன். மௌனங்கள் பேசிக் கொள்ளும் என்று நினைத்தேன். பேசத் தொடங்கும் முன்னரே…,
அலாரம் அடித்தது 5.30 மணிக்கு, எழுந்துவிட்டேன். மறுபடியும் தூங்கிவிட்டு 7மணிக்கு எழுந்தேன்.
(இன்னும் கனவுகள் வரும்) 

No comments:

Post a Comment