(இரவு 16/12/2012 – காலை 17/12/2012)
மூன்று கனவுகள்
வந்தது, ஒவ்வொன்றும்
வித்தியசமாக
இருந்தது. இத்தனைக்கும் 11 மணிக்கே
தூங்கிவிட்டேன்.
ஒரு கனவு முடிந்தவுடன்
மற்றொரு கனவு ஆட்டோமெட்டிக்கா
அடுத்தக்
கனவுக்குள்
பயணப்படுகிறேன்.
i.
நான் இலங்கையில்
இருக்கிறேன்.
அண்ணன் பிரபாகரன்
அவர்களுக்கு
துணையாய்
போரில் ஈடுபடுகிறேன்.
இலங்கைப்
போரை வீரத்துடன்
எதிர்கொள்கிறேன்.
எங்கள் போராளிகள்
ஒவ்வொரும்
கடும் நெருக்கடியால்
போரில் நிலைக்குலைந்துள்ளனர்.
அடுத்த நாள் வண்டியில்
நான் போய்க்
கொண்டிருக்கும்போது
என்னை யாரோ பின்தொடர்வது
தெரிந்தது.
அவர் என்னைக்
கொல்ல வருகிறார்
என்பது மட்டும் தெரியும். வேகமாக வண்டியை ஓட்டுகிறேன்.
முடிவுத்
தெரியாமல்
கனவு முடிவடைகிறது.
நிஜத்தில் நான்
விடுதலை புலி போராளியாக
இருக்க ஆசைப் பட்டத்தில்லை. எல்லோரும் அப்படித்தான்,
ஆனால் சூழ்நிலை தூண்டுகிறது.
எனக்கு அந்த சூழ்நிலை வரவில்லை என மனதை
தேற்றிக்கொள்ள
வேண்டியதான்.
எப்போதும் நான் போரை விரும்பியது
கிடையாது.
ii.
இயக்குனர் பாரதிராஜா
அவர்களிடம்
உதவி இயக்குனராக
வேலை செய்கிறேன்.
வீடியோ கேமரா என்
கையில் கொடுத்து ஷாட் எடுக்க
சொன்னாரு.
க்ளோசப் க்ளோசப் இன்னும் க்ளோசப் சொல்லி கண்ணுக்கு
பக்கத்தில்
கேமராவை கொண்டு போய் நிறுத்தினேன்.
அடுத்த ஷாட் எடுக்கும்போது
மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டேன், என்ன பயன்
கண்டுபிடித்துவிட்டார்கள்.
இயக்குனர் பாரதிராஜாவிடம்
உதவி இயக்குனராகம்,
நான் நினைத்து
கூட இல்லை.
இல்லாத ஒன்றை இருப்பதாக
சொல்வது எளிதல்ல.
iii.
மயக்கம் என்ன
தனுஷ் மாதிரி CANAON STILL
CAMERA-வை எடுத்துக்
கொண்டு காட்டுக்கு
போட்டோ எடுக்கப் போகிறேன். என்னுடன் ஒரு பெண்
இருகிறாள்,
அவள் முகம்
தெரியவில்லை
ஆனால் நான் போகும்
வழியெல்லாம்
துணையாய்
இருக்கிறாள்.
திடீரென்று
ஒரு பெரிய
பூச்சி எங்களை துரத்தியது,
நாங்கள் ஓடினாலும்
பின் தொடர்ந்து
பறந்து வந்தது. தேனீ பெரிசா
இருந்தா எப்படியிருக்கும்
அந்த மாதிரியிருந்தது.
பின் நான்
தூக்கத்திலிருந்து
எழுந்துவிட்டேன்.
இந்த கனவு
மட்டும் பயமாகயிருந்தது.
இப்படியொரு நிகழ்ச்சி
நடந்தால்
காட்டுக்குள்
போவதற்கு
யோசிப்பேன். மனிதனுக்கு பாதுகாப்பு
ரொம்ப முக்கியம்,
அதற்கடுத்து
தான் மற்றவைகள்.
ஒரே இரவுல
மூன்று கனவுகள், எனக்கும் ஆச்சர்யமாக
இருந்தது. ஆர்வத்தால் முதல் நாள் கனவுகளை
எழுதிவிட்டேன்.
(இன்னும்
கனவுகள் வரும்)
No comments:
Post a Comment