கனவைப் பற்றி
இப்பதான்
ஒரு கவிதை
எழுதினேன். சில விஷயங்கள்
நமக்கு காரணமில்லாமல்
பிடிக்கும்.
ஏன் பிடித்தது,
எதற்கு பிடித்ததென்று
தெரியாது
ஆனால் பிடிக்கும்.
அதில் ஒன்று தூக்கம். எல்லாவற்றையும் மறந்து
கண்கள் நீண்டத் தியானத்திற்கு
பயணிக்க ஆரம்பிக்கும்.
பயணத்திற்காக வழிதான்
தூக்கம்.
சில பேர் பாடல் கேட்டுக்கொண்டே
தூங்குவார்கள்,
சில பேர்
டிவி பார்த்துக்
கொண்டே தூங்குவார்கள்.
கண்கள் மூடியவுடன்
இருள் நமக்குள் சூழ்ந்து நமக்கானத்
தனி இடத்தை
உருவாக்கித்
தருகிறது.
அந்த தனிமையான
இடத்தை நிரப்ப நமக்குள் உருவாகியிருக்கும்
நிகழ்வுகள்,
கதாப்பாத்திரங்களுடன்
உரையாடல்களே
கனவுகளாக
மாறுகிறது.
கற்பனைக் கலந்த கனவுகளே நமக்கு திருப்தியளிக்கிறது.
காலை எழுந்தவுடன்
கனவு மறந்துபோகும்,
கனவுகளை மீட்டெடுப்பதுக்
கடினம். அப்படியே மீட்டெடுத்தாலும்
அறைகுறையாக
ஞாபகமிருக்கும்.
மற்றவர்கள் காணும்
கனவை என்னால்
சொல்ல முடியாது.
சுவாரசியமான நிகழ்வுகள்,
நினைவுகள்
அழியக் கூடாது, அதற்கு ஒரு உருவம்
தான் இந்த
முறய்சி.
ஆமாம் என் கனவுகளுக்கு
எழுத்து வடிவம் கொடுக்கப்
போகிறேன்.
புதுமையாக இருக்குமென
நினைக்கிறேன்.
பார்ப்போம் என்னால்
எவ்வளவு கனவுகளை நினைவுப் படுத்தப்போகிறேன்,
அதில் எத்தனையை எழுதப் போகிறேனென்று.
யதார்த்த வாழ்க்கையிலிருந்து
சற்று விலகிச் செல்லவில்லை,
வெயிலடிக்கும்
போது நிழலுக்காக
மரம் ஒதுங்கி
பின் வெயிலில்
நடப்பது போல் தான்
இந்தக் கட்டுரைகள்.
கட்டுரைத் தொகுப்பிற்கு
பெயர்
‘பார்வையாளர்களில்லாத
நாடகங்கள்’
அரானா
No comments:
Post a Comment