உப்பு நாய்கள் – இவர்கள் மனிதர்கள் தான்
இதை விமர்சனமாக இல்லாமல் நான் படித்துணர்ந்த அனுவபமாக எழுதுகிறேன்.
”உப்பு நாய்கள்” நாவல் படித்தேன். லஷ்மி சரவணக்குமார்-க்கு என்னுடைய வாழ்த்துக்கள். இளம் எழுத்தாளர்விரைவில் தமிழின் கவனிக்கத்தக்க எழுத்தாளராக அறியப்படுவார். தமிழில் ரொம்ப நாள் முழுதாக ஒரு நாவல்படிக்கிறேன். நாவலை ஒரு முறை தான் படித்தேன். மிக நெருக்கமாக என் மனதில் நின்ற வரிகள், கதாப்பாத்திரங்கள்.வன்மம் நிறைந்த உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனதிலும் வக்கிரங்கள் நிறைந்து கிடக்கிறது. அதை சிலகதாப்பாத்திரங்கள் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். எனக்கும் படிக்கும்போது ஏன் இவ்வளவு ஆபாசங்கள் இருக்கின்றனஎன்று, ஆனால் அதற்கான காரணங்கள் நாவலில் இருக்கிறது.
நாவல் படித்தவுடன் அவருடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய தொலைபேசி எண் புத்தகத்தில் இருந்தது.கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நான் நேரில் கண்டவர்கள் என்றதும் எனக்குள் சில அதிர்வுகள். நாவல் எந்த இடத்திலும்தொய்வு ஏற்ப்படுத்தவில்லை, விறுவிறுப்பான கதை நகர்தல். திரைப்படத்திற்கான கதைகள் இதிலுள்ளது. ஒவ்வொருகதாப்பாத்திரமும் நாம் பார்க்கும் சாதாரண மனிதர்கள்தான். சகிப்புத் தன்மை எவ்வளவு முக்கியமானது என்பது நாவலைப்படிக்கும்போது தெரியும்.
எனக்கு நாவலில் ஆதம்மா என்ற சிறுமியின் கதைப் பிடித்திருந்தது. அவளின் பேச்சு, செய்கைகள் என அனைத்தும்உணர்வுபூர்வமானது. 251 பக்கத்திலும் வன்முறை முதல் உடல் அரசியல் வரை எழுதியுள்ளார். புத்தகத்தில் SPECIAL THANKS TO: KOREAN FILM MAKER – KIM KI DUK என்ற வரியிருந்தது, நாவலின் முடிவில் அதன் அர்த்தம் புரிந்தது.
இங்கே இன்னும் செல்வி, சம்பத், ஆதம்மா போன்றவர்கள் பூமியில் பிறந்துகொண்டேயிருப்பார்கள், அவர்களைத் தடுக்கமுடியாது.
உப்பு நாய்கள்- நாவல்- லஷ்மி சரவணக்குமார்- உயிர் எழுத்து பதிப்பகம்.
No comments:
Post a Comment