குங்குமம் சன் டிவி குழுமத்தின் இன்னொரு அச்சு வியாபாரம். எப்போதுமே அப்பா பொங்கல், தீபாவளி போன்றப்பண்டிகை நாட்களில் மட்டும்தான் குங்குமம் வார இதழ் வாங்கிவருவார். ஏன்னென்றால் மூன்று புத்தகங்கள் மற்றும்ஏதாவது இலவசப் பொருட்கள் உள்ளேயிருக்கும். அப்போது சினிமா செய்திகள், ஜோக்குகள் மட்டுமே படித்தேன். மற்றஎதுவுமே என் கண்ணில் படாது. இப்போது ஒராண்டாக குங்குமம் வார இதழைப் படித்து வருகிறேன். நானும் ஒருவாசகன் என்ற முறையில் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். ஒரு முறை கல்லூரியில் காசுக் கொடுத்து வாங்கும்செய்தித்தாளில் விளம்பரங்கள் விரிந்துக் கிடக்கிறது என்று கருத்து விவாதம் நடந்தது. அதே மாதிரி ஒரு விவாதவிமர்சனமாக இதை எழுதுகிறேன்.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் நமது அன்றாட பணிகளை மட்டுமல்ல நமது சிறு பத்திரிக்கைஉலகையும் மாற்றியுள்ளது. தமிழ் மக்களின் கருத்து இவ்வளவு கூர்மையாகவும், எளிமையாகவும் மாற்றியதில் இரண்டுதளங்களின் பங்களிப்பு பெரிது. அதிலும் சில அல்ல பல பேர் status – கள் சிரிக்க, சிந்திக்க வைக்கிறது, அதிலும்அரசியல்வாதிகளை துவைத்து எடுக்கிறார்கள். குங்குமம் இதற்கு இரண்டாவது பக்கத்தில் இடம் கொடுத்து மற்றவர்கருத்துகளை பிரபலம் செய்கிறது. ஆனால் முன்று பக்கங்கள்.
சினிமா விமர்சனத்தில் குங்குமம் ஒரு தலை பச்சமாக செயல்படும், கலாநிதி மாறன் வெளியிட்ட அனைத்துப்படங்களையும் சூப்பர் என்று சொன்ன ஒரே இதழ் குங்குமம் மட்டும்தான். அந்த விமர்சனக்குழு-வுக்கு எனது ஆழ்ந்தஅனுதாபங்கள். மற்ற படங்கிளின் விமர்சனமும் அதே மாதிரிதான் இருக்கிறது. இதழில் படிக்கவே கூடாது எனநினைக்கிறப் பகுதி.
சினிமா பிரபலங்களின் பேட்டிகள் சராசரி 15 பக்கங்களைக் கொண்டது. ஆண் பெண் பேதம் கிடையாது. கேள்வியும்அவர்களின் படங்களைப் பற்றிதான். நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் மிகத் தெளிவாக அச்சாகியிருக்கும்.ஒண்ணுமில்லாத படத்தைக் கூட பேட்டிகளின் மூலம் பார்க்கத்தூண்டிவிடுவார்கள். இயக்குனர்கள் பேட்டியும் ஒரு சிலவாரங்களில் வரும்.
வெளிமாநிலங்களில் நடக்கும் செய்திகளை நியூஸ் வே மூலம் சினிமா துணுக்கு போல வெளியிடுவார்கள். பெருபாலும்முதல்வர்கள், அமைச்சர்கள் அதிலடங்குவார்கள். அவர்களின் அறிவிப்புகள், புலம்பல்களை கேலியாக்குவது.
வாசகர்களின் கவிதைகள் இடம்பெறாதா வாரஇதழ்களேயில்லை எனலாம். அந்தளவுக்கு கவிதைகள் படிப்பதற்குபிடிக்கும். சில வாரங்களில் ஒருவர் மட்டும் எழுதிய கவிதை பிரசுரமாகும். புது கற்பனைகளை வளரச் செய்கிறது.
உதாரணம்
வாசகம்
அந்தந்த வயதில்
இலவச இணைப்பாய்
கிடைத்துவிடுகிறது
“வயசு அப்படி…’
என்ற வாசகம்
எழுதியது நா.கி.பிரசாத், கோவை.
கவிதைக்காரர்கள் வீதியில் நடந்தது எத்தனைப் பேர் என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள் முகவரி அந்த வீதியில்இருக்கிறது.
நேற்றைய பொழுதில் இன்றய தலைமுறை பார்க்காத புகைப்படங்களை எடுத்த நபரின் பேட்டியும் அந்தப் புகைப்படம்எடுத்த தருணமும் நம்மை சிலிர்க்க வைக்கும். இதுவும் சினிமா சம்பந்தப்பட்ட செய்தியே. தொகுப்பாளர் திரு.அமலன்நல்ல ரசனை உள்ளவர். ஒரு சேகரிப்பு பழக்கம் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டிய குணம். நாம் அறியாததொழில்நுட்ப கலைஞர்களின் அறிமுகம், இயக்குனர்களின் பார்வை, நடிகர்களின் பாவனைகள் என பரிமானக்காட்சிகள்.நாளைய சரித்திரமும் இதே பொழுதிலிருக்கும். திரைக் கலைஞர்களுக்கு எப்போதும் இரண்டு முகங்கள். திரைக்கு முன்திரைக்கு பின், பின்னாலிருக்கும் பக்கம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். மக்களுக்கு எப்போதும் அதுசுவாரசியமானத் தகவல் தான்.
நம் உடம்பு ஒரு ஆய்வுக்கூடத்திற்கு சமம். நம்மை நாமே சரி செய்து ஆரோக்கியமாக வாழ சொல்கிறார் டாக்டர்எம்.என்.சங்கர். வாசகர்கள் இதை தவறாமல் படிப்பார்கள். மனிதனை விட நோய்கள் அதிகம் உலாவும் இந்த உலகத்தில்எளிய டிப்ஸ்கள் மூலம் சரி செய்துகொள்ளத்தக்கது. தன் கையே தனக்குதவி என்ற பழமொழியில் இருக்கும்அர்த்தத்தை புரியவைக்கும் சிறப்பானப் பகுதி.
காதலுக்காக உயிர் தந்து கடவுளாக இன்றும் வாழும் தெக்கத்தி ஆத்மாக்களின் கதை என்று பாரதி தேவி அவர்கள்”கள்ளிக்காட்டுக் காதல்கள்” என்றத் தலைப்பில் தொடராக எழுதிவருகிறார். ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதியைதவறாமல் படிப்பேன். தமிழ்நாட்டில் காதலுக்காக இத்தனைப் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்பொழுதேகாதலுக்கு எதிர்ப்பு தான் மிஞ்சியிருக்கிறது. இந்தக் கதைகளை அவர் எங்கு படித்தார், யாரிடம் கேட்டார் என்ற தகவல்இல்லை. ஆனால் இறந்தவர்கள் இன்று கடவுள்களாக போற்றப்படுகிறார்கள் என்பது நிச்சயம். ஒவ்வொரு வாரக்கதையும் உயிரோட்டமாக இருக்கிறது. குங்குமம் இதழுக்கு சிறப்பானப் பகுதியே.
புத்தக அறிமுகம், சிற்றிதழின் சிறிய விமர்சனம், புதிய திரைப்பட பாடல்களின் சிறப்புகள், நாம் காணாதஇணைவலைகள் என புதிய விஷயங்களை நம் பார்வைக்கு வைக்கிறது. எல்லாமே குறுந்தகவல்களின் சாயல்கள்.ஆனால் நல்ல தகவல்கள் தான்.
திரு மனுஷ்ய புத்திரன் எழுதும் ”நிழல்கள் நடந்த பாதை” தொடர் குங்குமம் இதழின் மற்றொரு சிறப்பான பகுதி. அதில்அவர் எழுதும் கட்டுரைகள் தூய்மையான வார்த்தைகள் நிறைந்த வரிகள். அவர் படித்த புத்தகம், கவிதை என இதழுக்குவேறொரு நிறம் கொடுக்கிறது. சமூக சிந்தனைகள், கலைப்பூர்வமான சொற்கள், நம் மனசாட்சியை கொஞ்சம் உறுத்தும்மொழிநடை, கவிதைப் பாதையில் நின்று எழுதுகிறார். அரசியல், ஆன்மீகம், விளையாட்டுகள் என அனைத்தையும்வேறொரு கண்ணோட்டத்தில் அலசிப் பார்க்கிறார், அதில் தன் அனுபவத்தை சேர்த்து எழுதுகிறார்கள். கூடிய விரைவில்இந்தப் பகுதி புத்தகமாக வெளிவருவதில்லை சந்தேகமில்லை. வாசகர்களின் உணர்ச்சியை மிக சரியான அளவில்புரிந்துவைத்துள்ளார்.
வாசகர்களின் சிந்தனையில் மற்றொரு சிறப்பம்சம் “ஒரு பக்கக் கதை”. உபதேசம் செய்யும் கதையாகயில்லாமல்சுறுக்கென்று மனதை தொடும் கதைகள். கதையை தேர்வு செய்வதில் அக்கறை தெரிகிறது. நான்கு அல்லது ஐந்துகதையிருந்தாலும் நறுக்கென்று இருக்கிறது. இதில் நிஜக்கதைகளும் அடங்கும். ஜோக்குகள் பல பக்கங்களில்நிறைக்கிறது சிரிக்கவும் வைக்கிறது.
பிரச்சனைத் தீர்க்கும் திருத்தலங்கல் பகுதியை நான் பார்த்துமில்லை படிப்பதுமில்லை. படித்தால் எனக்கு பிரச்சனைவரும் என்ற பயம்.
எமக்கு தொழில் எழுத்து பகுதியைப் படிக்கும்போது எனக்கு பல கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டும். தமிழ்எழுத்தாளார்களின் வாழ்வு, எழுத்து எவ்வளவு வலி மிகுந்தது என்பது இந்தப் பகுதியில் பதிவுசெய்யப்படுகிறது.வாழ்க்கை நடைமுறையிலிருந்து எப்படி எழுதுவதற்கு பழகினார்கள் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பாடம்.எழுதுவது எளிதல்ல, நிறையப் படித்தால் எழுதலாம் என்பது ஒரு வகை, நிறைய பார்த்தாலும் எழுதலாம் என்பதுஇவர்களைப் பார்த்தால் தெரியும். திரு வெ.நீலகண்டன் அவர்கள் குங்குமம் இதழுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்குமிகச்சிறந்த பகுதியைத் தொகுத்து வருகிறார். தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலையை முகமூடி அணியாமல்வெளிப்படுத்தும் பக்கங்கள். திருப்புமுனை பகுதியும் இதே ஸ்டைலில் அடங்கும் கட்டுரைகள்.
”ச்சீய் பக்கங்கள்” பொதுவில் பேசத் தயங்கும் புதிர் விஷயங்களின் ஹிஸ்டரி என்ற அடைமொழியுடன் இருந்தாலும்அதற்கான விஷயம் உள்ளேயிருக்கிறது. இது நல்லப் பக்கங்கள்தான். வரலாற்றில் எல்லாமே பயன்படுத்தப்பட்டுஇருக்கிறது, காலம் மாறும்போது அதன் வடிவமும் மாறுகிறது அவ்வளவுதான். ஆராய்ச்சி செய்து இந்தக் கட்டுரைஎழுதுவதால் கவனிக்கப்படத்தக்கப் பக்கங்கள்.
சினிமாவை நம்பி செயல்படுகிறார்கள், ஆனால் சில கட்டுரைகள் நம்மை வாங்க செய்வதற்கான வழியென்றாலும்வாங்கிதான் ஆகவேண்டும். விளம்பரங்கள் அதிகமாக ஆக்கிரமிப்புகளில்லை என்பது ஆச்சர்யம் தான். பத்து ரூபாய்நியாயமான விலைதான்.
என் மதிப்பு 5.5/10.
No comments:
Post a Comment