அரானா பக்கம்

Friday, 19 October 2012

மூன்று கவிதைகள்


மடித்து
வைக்கப்பட்ட
கடிதம்
பிரித்துப் பார்த்து
படித்தேன்
உன் தனிமை
உன் வெறுமை
உன் அழுகை
முடிவில்
இப்படிக்கு
உன் பெயர்

காற்றுள்ள போது
சுவாசிக்கிறேன்
இல்லாத போது
சபிக்கிறேன்
நிலமிருக்கும் போது
நடக்கிறேன்
இல்லாத போது
நடைப் பிணமாகிறேன்
தண்ணீருக்கும் போது
வீணடிக்கிறேன்
இல்லாத போது
தவிக்கிறேன்


மழைப் பிடிக்காத
தருணங்கள்
வெயில் பிடிக்காத
தருணங்கள்
பறவைகளின் நடுக்கும்
மரங்களின் சத்தம்
தேங்கியிருக்கும் நீர்
இருளிலிருக்கும் வெளிச்சம்
இவையெல்லாம்
கவிதை எழுதச் சொல்கிறது


No comments:

Post a Comment