இன்னும்
ஒரு முறை
என்னைக் கொன்று
விடு
உன் இரகசியங்களை
சொன்னதற்காக
இன்னும்
ஒரு முறை
என்னைக் கடத்தி
விடு
உன்னை முத்தமிட்டதற்காக
இன்னும்
ஒரு முறை
என்னை மன்னித்து
விடு
நம் இருவருக்குமான
உறவு
இந்த இடத்தில்
இந்த நிமிடத்தில்
இந்த நொடியில்
முடிகிறது…
சொல்லாத
சொற்களை
உன் காதுகளில்
சொன்னேன்
சொற்களில் காமம்
இருந்தது
கேட்டுக்கொண்டுருந்த
நீ
என்னை அடிப்பதா
என்னைக் கொள்வதா
யோசித்தாய்
நீயும்
என்னைக் கூசும்
வார்த்தைகளால்
கொன்றுக் கொண்டு
இருந்தாய்
சொற்களில் வன்மம்
இருந்தது…
உன்னிடம் விருப்பமில்லாமல்
இருக்கிறேன்
உன்னிடம் பேசக்கூடாதென
நினைக்கிறேன்
என்னிடம்
சில தயக்கங்கள்
சில தடுமாற்றங்கள்
சில ஏக்கங்கள்
இருக்கிறது
யாரற்ற மனநிலை
யாரற்ற தனிநிலை
சில நாட்கள் கடந்து
போக வேண்டும்
திரும்பி வருவதற்கு…
No comments:
Post a Comment