தோல் திண்ணுபவன்
அப்பொழுதுதான் அழகுநாதன் அம்மாவிடம் கோபப்பட்டு கடைக்குப் போனான். போகும் வழியெல்லாம் அவனுக்கு அம்மாவை திட்டனும் போல இருந்தது, ஆனால் முடியவில்லை என்ன செய்ய. போகும் வழியில் நடந்துபோனவர்கள், வண்டியில் போனவர்கள் என் அனைவரையும் வெறுப்பான பார்வையை வீசினான். கடையை அடைந்தபின் ஒரு சீட்டைக் கடைக்காரரிடம் நீட்டினான், சீட்டில் இருந்தப் பொருட்களை அவன் கூடையில் போட்டுக்கொண்டுருந்தார். தம்பி ஷிக் ஷாம்பூ இல்ல கிளினிக்+ தரடா என்றார் கடைக்காரர், எதையாவது குடுங்க சலிப்புடன் சொல்லிவிட்டு மிச்சக்காசை பையில்போட்டுக்கொண்டு கிளம்பினான்.
வீட்டுக்கு போகவில்லை, அம்மா வஞ்ச வார்த்தைகள் அவனைக் கசக்கியது. தெருமுனை மரத்தடியில் உட்கார்ந்தான். அழகுநாதன் ஆறாவது படித்தாலும் மற்ற விசயங்களை விட திட்டும் வார்த்தைகள் மட்டும் அவன் மனதில் ஆழமாக பதியும். பிறரை இவன் திட்டுவதேயில்லை. அழுகையும் கோபமும் சேரும் இடத்தில் நின்றான் அழகுநாதன். மணி 11 ஆகிவிட்டது, சூரியனின் சூடு பூமியைத் பலமாக தாக்கிக்கொண்டுருந்தது. வீட்டில் அவன் அம்மாவுக்கும் சூடு பிடித்தது. அவரு வேற கரெக்டா சாப்பிட வந்திவாரு இவன வேற இன்னும் காணாம் என்று பொறிந்து கொண்டுருந்தார்.
***
ஒரு நாள் முன்னாடி பள்ளிக்கூடத்தில் குற்றாலம் டூர் போவதற்காக டீச்சர்கள் பேசிக்கொண்டுருந்தனர். அழகுநாதன் இதுவரை டூர் போனதில்லை. குற்றாலத்தில் அருவியில் குளித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து நனைந்துபோனான், இந்த தடவைபோயே ஆகவேண்டும் என்று தீர்மானித்தான். அதில் யார் யார் வரப்போறீங்க என்று கேட்க முதல் ஆளாக கைத் தூக்கினான் அழகுநாதன். அவனோடு சேர்ந்து 20பேர் பெயரை எழுதிவிட்டார் டீச்சர். இந்த டூர் பீஸ் 1000 ரூபாய் இரண்டு நாளைக்குள் எல்லாரும் பீஸ் கட்டணும் சொல்லி டீச்சர் வாயை மூட அழகுநாதன் வாயை ஆஆஆவென்றான். அவனுக்கு உள்ளுக்குள் பயம். 4மணிக்கு பள்ளி முடிந்தது, எப்போதுமே அழகுநாதனின் அப்பா தான் கூப்பிட வருவார். ரொம்ப நேரமாகியும் வரவில்லை. டூர் பஸ்ஸில் ஆடலாம், குரங்குகளுடன் வம்பிழுக்கலாம், போட்டோ எடுக்கலாம் இப்படி பல ஆசைகளை தன்னுள் வைத்துக்கொண்டான். மொத்தம் ஆறுபேர் மட்டும் பள்ளியில் இருந்தார்கள். 5.15 மணிக்கு அவனின் அம்மா வந்தார். இவன் அம்மாவை பார்த்தவுடன் பள்ளிலே அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்து அடி வெளுத்துவிட்டார் அம்மா. அப்போதும் அம்மா மீது தீராத கோபம். இரவு முழுக்க அழுது அழகுநாதனுக்கு கண்கள் வீங்கியிருந்தது.
***
12.15மணிக்கு கடையிலிருந்து வந்தான் அழகுநாதன். வந்தவுடன் மீண்டும் அம்மா கையால் அல்ல தோசைக் கரண்டியால் அவனை அடித்து துவைத்துவிட்டார். அழுதுகொண்டே அழகுநாதன் கோபத்தில் மாடியில் நின்று நகத்தை கடித்தான். பத்துவிரல்களிலும் நகமில்லாமல் சுற்றியிருக்கும் தோளைக் கடித்துக் கொண்டுருந்தான்.
No comments:
Post a Comment