மங்கலான காலைப் பொழுது
யாருமற்ற வீடு
யாருமற்ற வீதி
வார்த்தைகளைத் தேக்கி வைக்கிறேன்
நீ வரும் நேரம்
இன்னும் வரவில்லை
வந்ததாக நினைத்துக்கொண்டு
பேசிக் கொண்டுருக்கிறேன்
காத்திருந்து காத்திருந்து
நொடிகளும் நிமிடங்களும்
இரத்தத்தை குடிக்கிறது
கடந்த நேரத்தை மறந்து
நிகழ் நேரத்தை துறந்து
வரும் நேரத்தை திறந்து
காத்திருப்பதில்
சுகமில்லை
ஏக்கமில்லை
ரணம் நிறைந்தது
முதல் பெண் அவளிடம் சந்தேகம்
முதல் ஆண் அவனிடம் சரியான பதில்
முதல் தோழனிடம் பெயர்
முதல் காதலியிடம் வீழ்ச்சி
முதல் மனைவியிடம் காமம்
முதல் குழந்தையிடம் அழைப்பு
உண்மை
உன்னிடம் சொல்கிறேன்
பொய்
என்னிடம் கேட்டு தெரிந்துகொள்
விசாரணை வேண்டாம்
காகிதத்தில்
கையெழுத்து வேண்டாம்
நாளை வரை காத்திரு
கொலைக்கானத் தடயமிருக்கு
இரத்தம் காய்ந்திருக்கு
பசிக்காக கொத்திருக்கு
கழுகு
இன்று
இன்னும் பிணங்கள் வரும்
No comments:
Post a Comment