அரானா பக்கம்

Monday 16 July 2012

ஓராண்டானது


மாமா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் இரண்டாவது அண்ணன். மாமா தற்கொலை செய்து கொண்டவர். நாட்களுடைய வேகம் என்றும் குறையாது என்பதற்கு சாட்சி. போன வருடம் இதே தேதியில் அழுது கொண்டுயிருந்த எல்லோரையும் நினைத்துப் பார்க்கிறேன். அத்தையின் கண்களில் இருக்கும் சோகத்தை எழுதிவிடமுடியாது. என் அம்மாவிடம் இருக்கும் வலியை உணர்ந்துவிடமுடியாது. செய்தித்தாளில் படிக்கும் போது தற்கொலை செய்துகொண்டவர்கள் ஒரு கோலை என்று நினைத்தேன். ஏனென்றால் தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும். ஒரு மனிதனுக்கு எவ்வளவு வலி(மை) இருந்தால் தன்னை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் வரும். தற்கொலை என்பது ஒரு நிரந்தர தியானம் மாதிரி. வாழ்வதற்கு எப்படி ஆசைப் படுகிறோமோ அதுபோல மரணத்தையும் ஆசையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதற்காக தற்கொலை செய்யவேண்டும் என்ற கேள்விக்கு ஓரே பதில் நிம்மதி என்றுதான் சொல்வேன். +2 தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை. இது சின்ன விஷயமில்லை மாணவன் அல்லது மாணவி பொதுத்தேர்வை எதிர்கொள்ள போதுமான மனத்தைரியம் இல்லை. இது நம்கல்விமுறைக்கு உதாரணம். போராட்டத்தில் வெற்றி பெற தற்கொலை. இது நல்லது, இது கெட்டது என யாராலும் சொல்லிவிடமுடியாது. அந்த நேரத்தில் எது சரியோ அது சரி, எது தவறோ அது தவறு. இப்பொழுது யாரும் அழத் தயாராக இல்லை. ஏன் அழவேண்டும், எதற்காக அழவேண்டும் என்ற கேள்விதான் வருகிறது. ஒரு மனிதன் அழுதான் என்றால் அவனுடைய மன அழுத்தம் குறைகிறது. மக்கள் இப்பொழுது இறுக்கமான மனநிலையிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய சுயத்தை இழக்கப் பழக்கப்பட்டுவிட்டார்கள். மனிதர்களின் நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில் அடைவதில் மிகச் சிறப்பானது இறப்பு மட்டுமே. இதை செத்தவர்களிடம் கேட்க கூடாது, தினமும் செத்துக் கொண்டு இருக்கும் மனிதர்களிடம் கேட்க வேண்டும். கும்பகோணம் தீ விபத்து நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. அது செய்தி கிடையாது வரலாறு, ஏனென்றால் ஒருவர் செய்யவில்லை அந்தக் கொலைகளை, ஒரு மாநிலமே சேர்ந்து செய்தக் கொலை. அந்தக் குழந்தைகளின் ஆசை இன்னும் சுற்றிக் கொண்டுதானிருக்கிறது. அவர்கள் சாகவில்லை எங்கோ ஒரு குழந்தையின் மறுப்பிறவியாக வாழ்கிறார்கள். வாழ்க்கை ரிஸ்க் தான்  எவ்வளவு பேர் ஜாலியா வாழ்கிறார்கள். எல்லோரும் ஒரு நாள் பொழுதை கழிக்க ஏகப்பட்ட மனிதர்களுடன் முட்டி மோதிதான் கழிகிறது. தற்கொலை செய்வதை ஆதரிக்கவில்லை, அதையும் விரும்பி ஏற்றுக் கொண்ட மனிதனின் மனநிலையை புரிந்து கொள்ளவும், அதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கப்படவேண்டும். வாழ்வதற்கு ஆசைப்படுவது, சாவையும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

புகைப்படமும் எழுத்தும்
அரானா

1 comment:

  1. very nice writing da keep it up ur style... defiantly u will success..............

    ReplyDelete