அரானா பக்கம்

Monday, 17 September 2012

பொய் இல்லை


யாரும் இங்கே என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம், இது ஒட்டுக் கேட்டத்திலை, பயணிகள் காதில் விழுந்தவை, என்னால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால்தான் இங்கே பதிவு செய்கிறேன். இதுவும் ரயிலில் நடந்ததுதான், செண்ட்ரலில் வில்லிவாக்கம் போய்கொண்டுருந்தேன். எப்போதும் மக்கள் கூட்டம் இருந்தது. என் பக்கத்தில் காதல் ஜோடி ஒன்று நின்றுகொண்டுருந்தார்கள்.
அவர்களுடைய உரையாடல் :
ஆண் : நா சொல்றத கேக்க மாட்டியா
பெண் : நா சொல்றத நீ கேளு
ஆண் : இப்பிடியே பேசிட்டு இருந்தேனா எ மாமா சொன்னது correct – டா போயிடும்
பெண் : என்ன சொன்னாரு?
ஆண் : அந்தப் பொண்ணு உனக்கு சரிபட்டு வராது, உன் பேச்சக் கேக்காது சொன்னாரு, அது போலத்தான் இப்ப நீ நடந்துகிற.
அந்த பொண்ணுக்கு அழுகை வந்துவிட்டது.
ஆண் : இப்ப எதுக்கு அழுற
பெண் : நா ஒன்னு அழல
(அப்போது அந்தப்பொண்ணுக்கு செல் ரிங் அடித்தது) எதிர்ப்பக்கத்தில் தோழி
தோழி : ஏய் நான் வியாசர்பாடியில எறங்கப் போறேன்.
பெண் : நானுந்தான்
ஆண் : அப்ப எல்லா அவ்வளவுதான்
பெண் : ஆமா
(அமைதி)
பெண் : என்னோட சர்டிவிகேட்டு?
ஆண் : நா ஒண்ணு அத தூக்கிட்டு ஓட மாட்டேன்.
பெண் : நீ ஓடமாட்டேன் தெரியும்.
டீரெயின் வியாசர்பாடியில் நின்றது. அவள் கீழே இறங்கி அவனைப் பார்த்தாள் ஆனால் அவன் பார்க்கவில்லை. அவள் போன பிறகு, இவன் அவளைப் பார்த்தான். டீரெயின் கிளம்பியது.

இவர்கள் சுற்றிருந்த முப்பது பேரும் கேட்டோம், ஆரம்பம் முதலே பையனின் பேச்சில் ஆணாதிக்கம் மேலோங்கியிருந்தது. அந்தப் பொண்ணு அழும்போது யாரும் ஏம்மா அழுறேன்னு கேக்கல. இந்த சம்பவத்துக்கு முன்னாடி என்ன நடந்திருக்கலாம் என்று தெரியவில்லை, இந்த சம்பவத்துக்கு அடுத்தது என்ன நடந்தது என்றும் நம்மால சொல்ல முடியாது. இரண்டு பேருக்கும் விட்டுக்கொடுத்து போகும் எண்ணம் இல்லை. புரிதல் எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு அன்று புரிந்தது. ஒரு பெண்ணை நாம் காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்தப் பெண்ணை எவ்வளவு புரிந்துவைத்துக்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது காதல். இந்தக் காட்சி என்னை பல நேரங்களில் தாக்கியது. இப்படித்தான் இருக்குமா ஒரு காதல் முறிவு, ஏன் இவர்களெல்லாம் காதல் செய்கிறார்கள், பிரிந்தபின் இவர்கள் எண்ணம் எப்படியிருக்கும், என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எல்லோருமே இங்கே பொய்யான முகம், பொய்யான வார்த்தை மற்றும் பொய்யான வாழ்க்கை.

No comments:

Post a Comment