தற்போது
குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் ஒரு பக்கம் பயம் மறுபக்கம் சிரிப்பு.
முதலில்
பயம்:
இந்தத்
தலைமுறை குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். உள்ளத்தாலும் உடலாலும் அவர்களுக்கு பிரச்சினை
அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படியிருக்கும் என்று அதை அனுபவித்த
அனைவருக்கும் தெரியும். இப்போதுள்ள இளம்தாய்மார்களின் பெருமை ”என் குழந்தைய நான் வெளிய
விளையாட அனுப்பவேமாட்டேன்”. அவர்களது உலகம் சின்ன அட்டைப் பெட்டிக்குள் அடைப்பட்டுள்ளது.
உயிரில்லா உயிர்களுடன் தான் அவர்கள் விளையாட்டு. இதற்கு என் அண்ணன் மகன் ஒரு உதாரணம்.
போகோ சேனலில் வரும் பீம் என்ற கற்பனை கதாப்பாத்திரம் பிடித்துவிட்டது. அந்த நாடகத்தை
ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஒளிப்பரப்பாகிறது என்று நினைக்கிறேன். அதை பார்த்துக்கொண்டே
சாப்பிடுகிறான், தூங்குகிறான் முக்கியமானது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை.
இவனுக்கு எதிர்ப்பு சக்தி ரொம்ப குறைவு, இப்ப வரைக்கும் காலைல அவன் எழுந்தவுடன் சாப்பிடுவது மாத்திரைதான்.
லேசாகக் குளிர்க் காற்று அடித்தால் கூட அவனுக்கு சேராது, விளையாடி வியர்த்தாலும் அண்ணன்
அண்ணி பாடு திண்டாட்டம்தான்.
இரண்டாவது
பயம்:
என்ன
படிக்கிறோம், ஏன் படிக்கிறோம் என தெரியாமல் பலபேர் படிகிறார்கள். அர்த்தம் கிடையாது
அல்லது அர்த்தமே இல்லை இப்படிதான் படிக்கிறார்கள் குழந்தைகள். அக்கா மகளுக்கு Annual
Exam. First Standard கிளாஸ் படிக்கிறாள். G.K test. What is your Religion? Hindu இந்த பதிலை மனப்பாடம் செய்வதற்குள் ஏகபட்ட
திட்டு, அடி வாங்கிவிட்டாள். Hindu என்ற
சொல்லுக்கு அர்த்தம் சொல்லிதரவில்லை. பள்ளியும் ஆசிரியரும் ரொம்ப நல்ல பழக்கத்தை குழந்தைகளுக்கு
சொல்லித் தந்துள்ளனர். அந்த (Hindu) வார்த்தையை
அவளுக்கு புரியவைப்பதற்குள் நான் பட்டபாடு. எப்படியோ புரியவைத்துவிட்டேன்.
திருக்குறள்
பிரச்சினை:
இதே
அக்கா மகள் அழுதுகொண்டுருந்தாள். என்ன விஷயம் என்று கேட்டேன். அண்ணன் பையன்
Pre.K.G. இவள் First Standard அவன் 5 திருக்குறளைச் சொல்லி முதல் பரிசு வாங்கிவிட்டான்.
இதை அண்ணி பெரிமைப்படுத்த இவளுக்கு அடி கிடைத்துவிட்டது.
பொறுமையும், பெருமையும் நிறைந்த குறளால் இவ்வளவு கொடுமை. இதை தீர்ப்பதற்கு வள்ளுவர்
இல்லை.
நடனம்
இப்போது
வரும் சினிமாப் பாட்டு வரிகள் புரிகிறதோ இல்லையோ அதை குழந்தைகளும் பாட ஆரம்பித்துவிடுகிறார்கல்.
” வேணா மச்சா வேணா மச்சா “ பாட்டுக்கு இரண்டு வயசு குழந்தை ஆடுகிறது. ஒரு நாள் மதுரையில்
இருந்தேன், கரண்ட் அடிக்கடி கட்டானது, சரி செல்போன்ல ” உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச
அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்ச ” அதே அண்ணன் பையன் சித்தப்பா எனக்கும் இந்தப்பாட்டு
ரொம்ப பிடிக்கும் என்றான். இசை ஒரு குழந்தையின் மனதை எப்படி ஈர்க்கிறது, இந்தப்பாட்டை
இப்போது அவன் பாடுகிறான். உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச………….
அரானா

No comments:
Post a Comment