ஏசு
எனும் மனிதர்
பச்சை என்கிற காத்து படத்தின்
வெளியீடு எந்த விதமான பிரச்சினை இல்லாமல் நல்லா
நடக்க வேண்டும் என்று படத்தின் நாயகன் பிராட்வேயுள்ள பிரபல சர்ச்சில் பிரார்த்தனைக்கு
ஏற்பாடு செய்திருந்தார். நான் சென்ட்ரல் வழியாக செல்வதால் அதை என்னிடம் கொடுத்து போகச்
சொன்னார். 6மணிக்கு கூட்டம் நடைபெறும் என்பதால் நான் கோடம்பாக்கத்திலிருந்து 5 மணிக்கே
கிளம்பிவிட்டேன். பிராட்வேயிலிருந்து அரை மணி நேரம் நடந்து அந்த தேவாலயத்தைக் கண்டுபிடித்தேன்.
வழியில் இரண்டு நபர்கள் எனக்கு உதவி செய்தனர்.
மற்றவர்களுக்கு அது பிராட்வேயில் தான் இருகிறாதா என்று சந்தேகம்.
தேவாலயத்தின் நுழைவாயிலில் சென்றதும்
அது இந்தியாவை ஆண்ட போது ஆங்கிலேயரால் கட்டப்பட்டது என்று தெளிவாக தெரிந்தது. அவ்வளவு
அமைதி, நான் உள்ளே சென்று தாத்தா ஒருவரிடம்
பிரார்த்தனை எப்போது நடைபெறும் என்று கேட்டேன் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்திவிடும்
என்று சொன்னார். கால் வலி பின்னி எடுத்துவிட்டது. படியில் உட்கார்ந்து சுற்றிப் பார்த்துக்கொண்டு
இருந்தேன். உள்ளே பள்ளிக்கூடமும் இருந்தது. 6 மணிக்கு ஒவ்வொருவராக வந்துகொண்டுருந்தனர்.
நானும் ஒரு பென்ச்சில் உட்கார்ந்துகொண்டேன். பள்ளிக்குழந்தைகளும் வந்தார்கள். அரங்கம்
நிறைந்துவிட்டது அதன்பின் பாதிரியார் வந்தார். அவர் பார்ப்பதற்கு டைட்டானிக் படத்தில்
வரும் வில்லன் போல் தோற்றமளித்தார். எல்லோரும் வழக்கம்போல் கண்களை மூடிக்கொண்டு ஜபம்
செய்ய ஆரம்பித்தனர். நானும் கண்களை மூடிக்கொண்டு இருந்தேன்.
அதன்பின் பைபிளை எடுத்து அதிலுள்ள
சில வாசகங்களைச் சொல்லி அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டுருந்தார் பாதிரியார். நல்ல
விஷயங்கள் எல்லாமே எல்லா மதம் போற்றும் புத்தகத்திலும் இருக்கிறது. மற்றவர்களிடம் அன்பாக
நடந்து கொள், உதவி செய், பிறரை துன்புறுத்தாதே, உணவைப் பகிர்ந்து கொள், இதுதான் அந்த
நன்னெறிகள். பின்புதான் பச்சை என்கிற காத்து படத்திற்காக சிறிது நேரம் பிரார்த்தனை
செய்தார் பாதிரியார். சரி நம்ம வேளை முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் கூட்டமும்
முடிந்தது. எல்லோரு வரிசையில் நின்று பாதிரியாரிடம் ஏதோ வாங்கிகொண்டுருந்தனர். சிலபேர்
கையிலும், சிலபேர் வாயிலும் வாங்கிகொண்டனர். சரி என்று நானும் வசிசையில் நின்றேன்.
பாதிரியாரிடம் ஆசிப்பெற்று என் கையிலும் அதை கொடுத்துவிட்டார், நானும் அந்த இடத்தைவிட்டு
நகர்ந்துவிட்டேன் திரும்பி என்னை கூப்பிட்டு நீ கிறிஸ்டினா என்று கேட்டார் நான் இல்லை
என்றேன், அப்படி என்றால் அதைக் கொடுத்துவிடு என்று கையில் கொடுத்தப் பொருளை வாங்கிக்
கொண்டார். நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இவ்வளவு அன்பு, பாசம் என்று பேசிவிட்டு
திடீரென்று இப்படி செய்யும்போது உங்களுடைய கடவுள் ஏசு இப்படித்தான் பைபிளில் எழுதியுள்ளார்
என்று தோன்றியது. நம்முடைய மதம் சார்ந்தவர்களுக்கு மட்டும் நன்மை செய் பிறர் மதத்தை
தவிர்த்துவிடு என்று சொல்லிவிட்டு போய்விட்டாரோ எனத்தோன்றியது. கிறிஸ்து என்பது ஒரு
மதமா என்றால் யாருக்கும் தெரியாது, அது எப்போது உருவானது என்றாலும் தெரியாது, ஆனால்
அவர்களால் எப்படி இந்த கற்பனை உலகத்தில் வாழமுடிகிறது என்று தெரியவில்லை.ஏசு ஒரு சாதாரண
மனிதர், பிறர் மீது அன்பு செலுத்தியதால் அவர் புகழ் பரவி மக்களால் கடவுளாக பார்க்கப்பட்டாரே
தவிர அவர் கடவுள் இல்லை. இப்போது நான் மதங்களைப் பற்றிப் பேசவில்லை, அது எனக்கு தேவையுமில்லை.
மனிதர்கள் மீது மதச்சாயம் பூசவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
புகைப்படமும் எழுத்தும்
அரானா

No comments:
Post a Comment