வன்ம
மனம்
இந்தக்
காட்சியைப் பார்த்த நொடியில் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. முரண்பாடு நிறைந்த சமூகத்தில்
பல கசப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இனிமேல் இப்படி ஒரு காட்சி நேர வாய்பில்லை.
வில்லிவாக்கத்திலிருந்து
சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் பயணம். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால் நின்று கொண்டுதான்
வந்தேன். என்னமோ தெரியவில்லை படியில் நின்று பயணம் செய்வதில் தனி சுகம் இருக்கிறது.
வண்டி பெரம்பூர் லோகோ வந்தது. திருநங்கைகள் மூன்று பேர் ஏறினார்கள். அவர்களைப் பார்த்தால்
எனக்கு சற்று பயம். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவதில்லை. எப்போதும் போல் அவர்கள் கைத்தட்டி
பயணிகளிடம் காசுக் கேட்டுக்கொண்டு இருந்தனர். நானும் என் பங்குக்கு ஐந்து ரூபாயைக்
கொடுத்தேன். ரயில் பெரம்பூர் வந்தது. அங்கே ஒரு வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு மற்றொரு
கையில் பெரிய பெட்டியுடன் ஒருவர் எறினார். அவர் குழந்தை மிக அழகாக இருந்தது. அனைவருக்கும்
குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. ரோஸ் கலர் ஆடையில் சூரியனிடமிருந்து
வந்த மிக அழகான வெளிச்சத்தில் பார்த்த உடன் முத்தமிடத்தோன்றும் அழகு. திருநங்கைகளில்
ஒருவர் குழந்தையைப் பார்த்து சிரித்தார், பதிலுக்கு குழந்தையும் சிரித்தது. நிமிட உறவு
என்பது இதுதான். எல்லோருடைய முகத்திலும் சிரிப்புதான் அழகு. குழந்தைகளுக்கு அது மற்றவர்களுக்கு
கவர்ந்துழுக்கும் சக்தி. கையை நீட்டி கூப்பிட்டார் தாவித்தாவி போனது ஆனால் அப்பா குழந்தையை
விடவில்லை. ஏதாவது அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று கையிலிருந்த இருபது ரூபாயை
கொடுத்துவிட்டார். பயணிகள் அனைவரும் அதிர்ந்தோம். அப்பா வெளிக்காட்டிக்கொள்ளாத கோபத்தோடு
குழந்தையிடம் பிடுங்கி ரூபாயைத் திருப்பிக்கொடுத்துவிட்டார், மேலும் பத்து ரூபாய் சேர்த்துக்கொடுத்தார்.
சென்ட்ரலும் வந்தது.
திருநங்கையின் முகம் வாடிப்போனது. வேகமாக இறங்கினார் அப்பா. நான்
திருநங்கையின் முகத்தைப் பார்த்தப்படியே நடந்தேன். பிச்சை எடுத்தக்காசை குழந்தையிடம்
கொடுத்தக்கோபத்தில் அவர் நடந்துகொண்டது விதம் சரி. இது அவருக்கு ஒரு கவுரவப் பிரச்சினை.
அதுவும் பொது இடத்தில்.
இந்த
சம்பவம் எனக்கு ஒரு பெரிய புரிதலை ஏற்ப்படுத்தியது. இரண்டு வெவ்வேறு நிலையுள்ள மனிதர்கள்
சந்திக்கும்போது சுனாமியை விட பெரியலைகள் இந்தப் பிரபஞ்சத்தைத் தாக்கும் எனத் தோன்றியது.
முகம்சுளிக்க வேண்டிய விஷயம்தான் ஆனால் அதன்
பின்னாலிருக்கும் பாசம், அன்பு இவைதான் திருநங்கைகளுக்கு தேவை. அவர்களால் குழந்தைப்
பெற்றுக்கொள்ள முடியாது. இன்னமும் அவர்கள் தனித்த அடையாளமாக இருக்கிறார்கள். மற்றவர்கள்
அவர்களை இன்னமும் வன்மம் நிறைந்த கேட்கமுடியாத வார்த்தைகளால் நிரப்புகிறார்கள். இங்கே
யாரும் யாருடைய ஆசையை நிறைவேற்றப்போவதில்லை, புரிந்துகொள்ளப்போவதுமில்லை.
அரானா

No comments:
Post a Comment