அரானா பக்கம்

Thursday, 21 June 2012

இணையும் குடும்பங்கள்

திருமணம் நடக்கும் தருவாயில் அந்த மாப்பிள்ளையும் பொண்ணும் ஏகப்பட்ட கனவுளோடு இருப்பார்கள். முகத்தில் பிராகாசமான ஒளி தெரியும். திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்குகள் ஏராளம். கல்யாணப் பெண்ணுக்கு அத்தைமார்கள் வைக்கும் விருந்துகள். நாள் வைக்கும் சடங்கு. இதை சடங்கைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சாப்பிடுவதற்கு தமிழன் கண்டுபிடிச்ச மிகச் சிறந்த சடங்கு. சைவ சாப்பாட்டிலிருந்து பிரியாணி, சிக்கன், மட்டன் என விளையாடலாம். ஒரு மாதம் இந்த திருமணக் கொண்டாட்டம் அந்த வீட்டை சுற்றி வளைத்திருக்கும்.
ரொம்ப நாள் கழித்து மாமா பொண்ணு திருமணத்துக்கு ஃபோட்டோ எடுத்தேன். திருமணம் நடந்தது மதுரைக்கு அருகேயுள்ள தனியாமங்கலம் என்ற கிராமம். ஊர் ஒரு பழைய பாரதிராஜா படத்தில் வருவது போல் இருந்தது. முறைப்படி எல்லாம் நடந்துகொண்டுருந்தது. இரண்டு வம்சாவளியைச் சேர்ப்பது மிகச் சாதாரண விஷயம் கிடையாது. இரண்டு பேருக்கு சண்டை வந்தாலே சமாதானம் செய்வது கடினம், ஆனால் வெவ்வேறு குடும்ப அமைப்பில் வளர்ந்து திடீரென்று இன்னொரு ஆண்னுடன் அல்லது இன்னொரு பெண்ணுடன் வாழ்வது எவ்வளவு பெரிய விஷயம். இது நம் பாரம்பரியம், வெளிநாட்டில் பிடித்தவரை சேர்ந்து வாழ்வார்கள் பிடிக்கவில்லை என்றால் பிரிவு. பிரிவைத் தாங்கிக்கொள்ளும் சக்தியுடையவர்கள் ஆனால் நாம் அப்படியில்லை. பிரிவு அன்புக்கு அடித்தளமாக இருக்கும். ரொம்ப நாள் வெளிநாட்டில் இருந்து வரும் கணவனுக்கு மனைவி காத்திருக்கும் தினங்களை மறந்து அன்றிலிருந்து அவளிடம் இருக்கும் சந்தோஷம், சுறுசுறுப்பு அப்பொழுது யாரிடமும் பார்க்க முடியாது. இது நம் பிரிவுக்கான அன்பு.
அரானா

No comments:

Post a Comment