அரானா பக்கம்

Friday, 22 June 2012

முரண்பாடு - 1


பூதமான சாமி 
        

சமீபத்தில் அக்கா பொண்ணுக்கு  மதுரைக்கு அருகேயுள்ள பாண்டிக் கோயிலில் மொட்டை போட்டார்கள். ஏனென்றால் 
அவளுக்கு உடம்புக்கு அடிகடி காய்ச்சல் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டாள், உடனே அக்கா சாமியிடம் அவளுக்கு உடம்பு சரியாச்சினா உன் கோயிலுக்கு வந்து மொட்டை அடிகிறேன் வேண்டிகொண்டதாம். நினைவிருக்கட்டும் அவளுக்கு ஒரு வயதாகிறது. மொட்டையடிச்சப் பிறகு இப்போ அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் யாருகும் எந்த நோயும் வராது, கோயிலுக்கு போய் மொட்டை போடலாம். மருந்து, மாத்திரை, டாக்டர் எல்லாம் தேவையேயில்லை. பாண்டி கோயில் மதுரையில் பிரபலமானது. பலி கொடுப்பதற்கு மிகச் சிறந்த இடம். அதுமட்டுமல்ல குடிகாரர்களுக்கும், குடித்துவிட்டு சண்டைப் போடுவதற்கும் நல்ல இடம். நாங்கள் ஞாயிற்றுகிழமை போனோம், அவ்வளவு கூட்டம். இத்தனைக்கும் மெயின் ரோட்டிலுள்ளது கோவில். ஏகப்பட்ட குழந்தைகளைத் துன்பப்படுத்தி  கண்ணீருடன் மொட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அக்கா மகளும் கத்தி அழுது பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். அடுத்தாக காது குத்துவது, என்ன கதியாயிருப்பாள் என்று நினைத்துப் பாருங்கள். எல்லோரு சாமி கும்மிடப் போயிட்டார்கள். சரி நானும் சும்மாபோயி நின்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பாட்டிக்கு சாமி வந்ததாகச் சொல்லி ஆட்டம் போடுது. உடனே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாட்டியிடம் அருள்வாக்குப் கேட்டனர், பாட்டியும் சில விஷயங்களைச் சொல்லி, மயக்கமடைந்துவிட்டது. அப்புறம் சாமி போயிருச்சுன்னு சொல்லி பாட்டி அசால்டா நடந்து போகுது. நான் பல முறை இந்த நாடகத்தைப் பார்த்துள்ளேன். அது எப்படி சாமி சிலையைப் பார்த்தால் அவர் உடம்பில் சாமி குடியேரி அவங்களுடைய குடும்பத்துக்கு மட்டும் நல்ல நடக்கும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுமாம். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பவன் யாராயிருந்தாலும் அவன் கடவுள் தான்.
முதலில் நாம் ஒன்றை தெளிவுப்படுத்துக் கொள்ளவேண்டும். ஆதிமனிதன் கல்லிருந்து ஆயுதம் செய்ததால் கல்லைக் கும்பிட்டான். பின் நீரைத் தொழுதான், அதன் பின் நெருப்பை கடவுளாக நினைத்தான். இதற்கிடையில் எப்போது வந்ததது இந்த சிலை உருவங்கள். அந்தச் சிலையை வடிவம் கொடுத்ததே ஒரு மனிதன் தான். நம்பிக்கை இருக்கலாம் ஆனால் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. இவர்களாக எதையோ கும்பிடுவார்கள், நானும் கும்பிடவேண்டும் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. அறிவில்லாதவன் கும்பிடுவான், நான் அப்படியல்ல. பெற்ற தாயையும் தந்தையையும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்கள், சேர்த்துவிட்டு கோவிலுக்கு செல்வார்கள். பிச்சைகாரனுக்கு ஒரு ரூபாய் போடமாட்டார்கள் ஆனால் உண்டியலில் கட்டுகட்டாக பணம் போடுவர்கள். இன்று ஒரு தனியார் நிதி நிறுவனம் போல் காட்சியளிக்கிறது. சாமியை பக்கதில் பார்க்க காசு, சிறப்பு தரிசனத்துக்கு சிறப்புக்காசு. பக்கத்தில் பார்ப்பவர்களுக்கு மட்டும் புண்ணியம் கிடைக்கும், வரிசையில் காத்திருந்துப் பார்ப்பவர்கள் முட்டாள்கள். அதுவும் ஐயர்கள் அதுக்கும் மேல். சிறப்பு செய்பவகளுக்கு சாமி கழுத்திருந்து மாலை, எழுமிச்சை பழம் என வாரி வழங்கிவிடுவார்கள். விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் சாமிதான் நமக்கு கொடுக்கணும் நாம சாமிக்கு கொடுக்கக் கூடாது. மனதில் நல்லதே நினைத்தால் நடக்கும் என்பது என் கருத்து.
புகைப்படங்கள்- அரானா

No comments:

Post a Comment