அரானா பக்கம்

Tuesday, 22 May 2012

பிடித்த குழந்தை:


தற்போது குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் ஒரு பக்கம் பயம் மறுபக்கம் சிரிப்பு.
முதலில் பயம்
இந்தத் தலைமுறை குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். உள்ளத்தாலும் உடலாலும் அவர்களுக்கு பிரச்சினை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படியிருக்கும் என்று அதை அனுபவித்த அனைவருக்கும் தெரியும். இப்போதுள்ள இளம்தாய்மார்களின் பெருமை ”என் குழந்தைய நான் வெளிய விளையாட அனுப்பவேமாட்டேன்”. அவர்களது உலகம் சின்ன அட்டைப் பெட்டிக்குள் அடைப்பட்டுள்ளது. உயிரில்லா உயிர்களுடன் தான் அவர்கள் விளையாட்டு. வேலியாய் இருப்பதும். இதற்கு என் அண்ணன் மகன் ஒரு உதாரணம். போகோ சேனலில் வரும் பீம் என்ற கற்பனை கதாப்பாத்திரம் பிடித்துவிட்டது. அந்த நாடகத்தை ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஒளிப்பரப்பாகிறது. அதை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறான், தூங்குகிறான் முக்கியமானது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை.
இரண்டாவது பயம்
என்ன படிக்கிறோம், ஏன் படிக்கிறோம் என தெரியாமல் பலபேர் படிகிறார்கள். அர்த்தம் கிடையாது அல்லது அர்த்தமே இல்லை இப்படிதான் படிக்கிறார்கள் குழந்தைகள். அக்கா மகளுக்கு Annual Exam. ஒன்னா கிளாஸ் படிக்கிறாள். G.K test. What is your Religion? Hindu இந்த பதிலை மனப்பாடம் செய்வதற்குள் ஏகபட்ட திட்டு, அடி வாங்கிவிட்டாள். Hindu என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்லிதரவில்லை. பள்ளியும் ஆசிரியரும் ரொம்ப நல்ல பழக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லித் தந்துள்ளனர். அந்த (Hindu) வார்த்தையை அவளுக்கு புரியவைப்பதற்குள் நான் பட்டபாடு. எப்படியோ புரியவைத்துவிட்டேன்.

திருக்குறள் பிரச்சினை
இதே அக்கா மகள் அழுதுகொண்டுருந்தாள். என்ன விஷயம் என்று கேட்டேன். அண்ணன் பையன் Pre.K.G. இவள் First Standard அவன் 5 திருக்குறளைச் சொல்லி முதல் பரிசு வாங்கிவிட்டான். இதை அண்ணி  பெரிமைப்படுத்த இவளுக்கு அடி கிடைத்துவிட்டது. பொறுமையும், பெருமையும் நிறைந்த குறளால் இவ்வளவு கொடுமை. இதை தீர்ப்பதற்கு வள்ளுவர் இல்லை.


No comments:

Post a Comment