இது நான் எழுதும் முதல் சிறுகதை
கவிதாவுக்கு பிறந்த
நாள்
இன்று அவள் பிறந்து
25 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்றுதான் அவளுக்கு முதல் பிறந்தநாள். புரியவில்லையா அவளிடமே
கேட்டேன் கொஞ்சம் யோசிச்சு கொஞ்சம் வெட்கப்பட்ட(மாதிரி) உதட்டில் சிரிப்போடு சொன்னால்
என் காதலன் ஸாரி என் லவ்வர் ஸாரி பாய்ஃபிரண்ட் எனக்கும் சொல்லப்போற முதல் பிறந்தநாள்
வாழ்த்து இதுதான். இதை அவன் எப்படி சொல்வான் என அவள் கனவு கண்டாள் நினைத்துப் பார்த்தாள்.
12 மணிக்கு சொல்வான, இல்ல சினிமா-ல வர்ற மாதிரி யாருக்கும் தெரியாம வீடுக்கு வந்து
கிப்ட் கொடுத்து சொல்வனா காலை-ல வந்து கேக் வெட்டி சொல்வனா என நீண்ட……..ஆசைகளை மனதில்
வைத்திருந்தாள். இதில் இன்னொன்றும் அடக்கம், அவன் தான் முதலில் வாழ்த்தவேண்டுமென்று
ஆசைப்பட்டாள்.
’இன்னைக்கு கண்டிப்பாக
நான் ஜெய்யிருவேன் நீ சீட்ட…ப்போடு…. ராஜ்மோகன் சார் மணி 10.30 ஆச்சு வீட்டுக்கு போங்க’
யோவ் ஒனக்கு மட்டும்
10.30மணி ஆகலையா சீட்டபோடுய்யா….இப்பத்தான் வேலைய முடிச்சிட்டு வந்திருக்கேன் அதுக்குள்ள
வீட்டுக்கு போக சொல்ற…. ஆட்டைக்கு எவ்ளோ 200ரூபா வச்சுப்போம். ரம்மி ஆட்டம் சூடுப்பிடிக்கிறது.
மணி 11.15 ஆகிவிட்டது. இரண்டு ஆட்டத்தில் ராஜ்மோகன் தோல்வி. இந்த ஆட்டத்துல விட்டகாச
பிடிக்கிறேன் சொல்லும்போது போலீஸ் இவர்களை கூண்டோடு பிடிக்கிறது. பதற்றமான மனநிலையில்
ஐந்து பேரும் இருக்கிறார்கள். யோவ் ஏட்டு இவங்களோட போன்நம்பர் அட்ரஸ் வாங்குயா இன்ஸ்பெக்டர்
சொல்ல ஒவ்வொருத்தரா சொல்ல ராஜ்மோகன் மட்டும் இன்ஸ்பெக்டரைப் பார்த்து பேசி வீட்டுக்கு
போன் போடுகிறார்.
“என் ஃபிரண்ட போல
யாரு மச்சா…அவன் டிரண்டையெல்லாம் மாதிவச்சான்” ரீங்டோன் அடிக்க ஆசையோடு அவசரமாக கவிதா
ஹலோ டிய……… கவிதா நான் அப்பா பேறேம்மா…நடந்ததை விவரிக்கிறார் ராஜ்மோகன் உடனே பதறிபோய்
கவிதா அம்மாவையும் பக்கத்துவீட்டு வக்கீலை எழுப்பி ஸ்டேஷனுக்கு போகிறாள். என்ன கேஸ்
என்று வக்கீல் கேட்டு கொண்டுருந்தார் கவிதாவுக்கு மீண்டும் குறுங்செய்தி ரிங்டோன் அடிக்க
HAPPY
BIRTHDAY MY DEAR KAVITHA, U HAVE ONE SURPRISE GIFT ON TOMORROW BY UR SWEET
HEART SENTHIL. GUD NI8… இனிமேல் தூங்க முடியாது….
No comments:
Post a Comment