சமீபத்தில் படித்த மிகச் சிறந்த
உரை
இப்போது இது சாத்தியமில்லை
”இதை
மட்டும் உங்களிடம் ஓ நீதிபதிகளே! இறைஞ்சிக்கேட்டுக் கொள்கிறேன். என் மகன்கள் வளர்ந்த
பின்னர் அவர்களைத் தண்டியுங்கள். அவர்கள் ஞானம் தவிர உலக பணத்தாசைகளில் இச்சை கொண்டால்
அல்லது அவர்கள் சூன்யமாய் இருந்து கொண்டு பண்டிதர்களாகத் தங்களைக் கற்பிதம் செய்து
கொண்டால் எனக்கு அளித்ததையே அவர்களுக்கும் அளித்திடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தீர்கள்
என்றால் எனக்கும் என் மகன்களுக்கும் உங்கள் கரங்கள் நியாயம் செய்தன என்றாகும்.”
திரு.
சாக்ரடீஸ்
இது தான் சாக்ரடீஸின் கடைசி ஆசை.
இதில் “சூன்யம்” என்ற சொலுக்கு
எனக்கு அர்த்தம் தெரியவில்லை. என் நண்பர் சொன்ன பிறகு தான் தெரிந்தது ”ஒன்றும் இல்லாதது”
என்று. தன் மகன், மகனுக்கு மகன் நல்லாவே இருக்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைத்துக்
கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் இப்படி அவர் கடைசி ஆசையை சொல்லுபோது எனக்கு ஆச்சரியம்.
எப்படிப்பட்ட மனநிலையில் இதை சொல்லிருப்பார் என்று. உலகத்திலுள்ள அனைத்தும் தனக்கு
சொந்தமில்லை என்ற அர்த்தம் தான் இதில் இருக்கும் உண்மை.
அரானா

No comments:
Post a Comment