அரானா பக்கம்

Friday, 4 May 2012

வித்தியாசமான கவிதை கிடையாது


இது ஒரு வித்தியாசமான கவிதை கிடையாது

”காசினியில் ஒரு சபாசரத்தி
கோளேசன் பொருந்திய அதிரூபம்
சரோருகம் போல் இரண்டு அட்சம்
சுசிமிதம் கொண்டு என்னைத் தாக்கும் சபலை
அதனால் அவளுக்கு நான் கைங்கரன்.”
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் (கல்லூரியில் படிக்கும் போது) நான் எழுதிய கவிதை. இதில் எட்டு வார்த்தைகள் எட்டு மொழிகளுக்கு சொந்தமானது. தமிழில் கவிதை எழுதுபவர்களின் சாதாரண வார்த்தைகள் தான் இதில் வேற்று மொழியில் உள்ளது. பிற மொழியோடு நம் மொழியை சேர்த்து எழுதும்போது புதுவிதமான அனுபவமாக உள்ளது. இரண்டு மொழிக்கும் சமமான ஒரு அழகு இருக்கிறது. அர்த்தம் ஒன்று அழகியல் வேறு. ”இதில் கைங்கரன் என்ற சொல்லுக்கு மட்டும் அடிமை என்று அர்த்தம்.” மற்ற ஏழு வார்த்தைகளுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

அரானா

No comments:

Post a Comment