மழை பெய்துக் கொண்டிருக்கிறது
கால் வைத்த இடமெல்லாம்
நனைகிறது
மழை பெய்துக் கொண்டிருக்கிறது
வீதியெங்கும்
மழைப் பிடிக்காத மனிதர்கள்
மழை பெய்துக் கொண்டிருக்கிறது
தாகத்திற்கு தண்ணீர்
குடிக்காமல்
குளிரைக் குடிக்கிறது
உதடு
தாகத்தோடும் தண்ணீரோடும் தான்
இந்த நாள்…!
பூ கட்டும்
கை – யிலிருக்கும்
வாசனை
சூடிக்கொள்ளும் பெண்களிடம் இல்லை…!
தினமும்
எங்கோ
ஒருவன்
எங்கோ
ஒருவனை
வதம் செய்கிறான்
பழிசுமத்துகிறான்
தனிமைப்படுத்துகிறான்
தீண்டப்படாதவனாக்கிறான்
மீண்டும்
நாளை வரும்…!
அவன் வீட்டில்
அவன் அறையில்
ஒரு பேய் சுற்றிக் கொண்டு
இருக்கிறது
அவன் மனதை
வக்கிரப் படுத்துகிறது
அவன் அங்கத்தை
தூண்டிவிடச் செய்கிறது
வேறு வழியில்லாமல்
அடைக்கலம்
கொடுத்து
அதனோடு வாழ்கிறான்…!
யாரோ
கண்கானிக்கிறார்
யாரோ
பின்தொடர்கிறார்
யாரோ
வசியப் படுத்துகிறார்
யாரோ
பயமுறுத்துகிறார்
யாரோ
நினைத்துக் கொள்கிறார்…!
தூசியடைந்த
ரயில் நிலையம்
யாரேனும் வருவார்கள்
பாசி படர்ந்த
மரம்
யாரேனும் தொடுவார்கள்
காத்துக் கொண்டுதான்
இருக்கிறது இவையிரண்டும்…!
பதில் தெரியாத
கேள்விக் கேட்டால்
நான் உங்களிடம்
பேச முடியாது
தெரியாத முகவரியை
என்னிடம் கேட்டால்
நான் உங்களிடமிருந்து
சற்றுத் தள்ளி நிற்பேன்
பார்க்காத ஒருவரை
பார்த்ததாகக் கேட்டால்
நான் இனிமேல்
உங்களை பார்க்கக்கூடாது
இப்படிதான் கழிகிறது
என் ஒரு நாள்…!
2012 கவிதைகள்
அரானா
No comments:
Post a Comment