ஒருவருக்கு மனச்சிதைவு ஏற்படும்போது பலத் தவறான முடிவுகளைத் தேர்ந்தெடுத்து அதன்வழி தன் சிதைவை சரிசெய்ய முயல்கிறான். எல்லோரும் இதில் அடக்கம். முக்கியமாக தவறான உடலுறவு கொள்ளுதல், புரிதல் இல்லாத பாலுணர்வு போன்ற விஷயங்களில் நாம் தவறான அபிப்ராயங்களைக் கொண்டுள்ளோம். இப்போதிருக்கும் உலகம் கலவி கொள்வதை கொண்டாடுகிறது, சாதாரணமான எடுத்துச்செல்லச் செய்கிறது. இளைஞர்கள் முதல் 60 வயதைத் தாண்டிய பெரியவர்கள்வரை ஆபாச எண்ணம் மேலோங்கி இருக்கிறது. சமீபத்தில் சட்டமன்றக் கூட்டத்தில் அமைச்சர்கள் மூன்று பேர் ஆபாசப் படம் பார்த்தற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகள் நம்நாட்டில் நடப்பது சகஜம். இது சட்டப்படி தவறு என்றால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 75 சதவீத ஆண்களின் மீதும் குற்றம் சுமத்தலாம் பொது நல வழக்கும் தொடரலாம். அனைவரது செல்பேசியிலும் ஆபாசப் படங்களை வைத்துள்ளனர். இணையதில் இது போன்றப் படங்களை இலவமாகப் பார்க்கவும் செய்யலாம், பதிவிறக்கமும் செய்யலாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் மூன்று அமைச்சர்களும் கல்யாணமாகி குழந்தைப் பெற்றவர்கள். அவர்களுக்கு இந்த மனச்சிதைவு ஏற்படக்காரணமாக இருப்பது என்ன என்று தெரியவேண்டும். பழங்கால தமிழர்கள் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து இன மக்களிடமும் ஒரு உணர்வு நம்மிடம் இருந்து வருகிறது. தெருவிலோ ரோட்டிலோ போகும்போது யாராவது நம்மால் செய்யமுடியாத ஒரு சாகசம் செய்தால் “வியந்துப் பார்ப்போம்”. இந்த குணம் அந்த நிகழ்வுக்கு காரணம். ஆங்கிலேயர்கள் நம்மைவிட எல்லா விஷயத்திலும் மேலானவர்கள். உடலுறவுக் கொள்ளுவதிலும் அவர்கள்தான் பல வழிமுறைகளை கையாளகிறார்கள். உடற்சுகத்தை முழுவதுமாக அனுவக்கின்ற உறவு அவர்களுடையது. ஆனால் இங்கே சில உடற் செய்கைகள் அருவருப்பாகவும் செய்யக் கூடாததுமாக உள்ளது. ஆண் பெண் இருவருக்கும் திருப்தி தரும் உடலுறவுதான் சிறந்தது. அதில் குறைகண்டவர்கள்தான் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு காரணம். இவர்கள் மீடியாவின் முயற்சியால் பிரபலமாகிவிட்டார்கள் பிரபலமாகாத பல பிரபலங்கள் இங்கே உள்ளனர்.
இளமைப் பருவத்தில் சுயஇன்பம் காணாத ஆண்களே இல்லை என்று தான் சொல்வேன். ஒரு குறிப்பிட்ட வயது வரை இந்தப் பழக்கம் தொடரும். திருமணத்திற்கு பின் இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு சுயஇன்பத்திற்கு அடிமையாகிறார்கள். அதற்கு ஒரு வித அழுத்தம் காரணமாகிறது. செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்னும் தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பாழடைந்த வீட்டைப் போல பலபேர் உள்ளங்களில் பாலுணர்வு எண்ணம் அடைந்துபோயுள்ளது. இதற்கு தீராத ஆசையா ? அல்லது மனம் சஞ்சலப்படுத்த வைக்கும் காட்சியா ?. இரண்டும் தான் என்பதே பொயில்லாத உண்மை. திரைப்படக் காட்சிகள் தொலைக்காட்சியில் வரும் கவர்ச்சிகர நிகழ்ச்சிகளும் இக்கருத்தைதான் முன்னிருத்துகிறது. ஒரு பெண்ணை வக்கிர மனதோடு பார்க்கவைத்தது இந்தச் சமூகத்தைச் சார்ந்தப் பிரதிநிதிகள் மட்டுமே. ஒரு பெண்ணை மனதில் நிறுத்தி உணர்ச்சியை வரவழைத்து சுயஇன்பம் காண்பது அப்பட்டமான உண்மை. வக்கிரப்புத்தியின் உச்சநிலையை அடைவதற்கு சமம். நமக்கு நல்லதை விட கெட்டதே அதிகம் பிடித்துப்போய்விடும். ஒரு நல்லது நடந்தால் நான்கு மடங்கு கெட்டது நடக்கிறது. ஆண் – ஆண் உறவு கொள்ளுதல், பெண் – பெண் உறவு கொள்ளுதல், மூன்றாம் பாலுடன் உறவு கொள்ளுதல் என்பது ஒரு இட்லி தோசை சாப்பிடுவது மாதிரி 24*7 எந்நேரமும் எந்த இடமும் தேவையில்லை. இதைதான் (Culture Development) என்கிறார்கள். இயற்கைக்கு மனிதர்கள் ஏழுலெழு ஜென்மத்துக்கும் எதிரிதான். இப்படியெல்லாம் செய்வது சரியல்ல என்று கூறமுடியாது. ஏன்னென்றால் தனிமனிதனின் சுதந்திரத்திற்கு இன்னொருவர் ஆக்கிரமிப்பு செய்வது தவறு. நம்மை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் மன்னிக்கவும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எல்லைகளை நாம்தான் வகுக்கவேண்டும். எல்லை மீறினால் பிரச்சினை எல்லோருக்கும்தான்.
அரானா

No comments:
Post a Comment