பின்குறிப்பு
உன்னைப் பற்றி எழுதவில்லை
உன் உறவுவைப் பற்றி எழுதவில்லை
பின்குறிப்பு
இதற்கு தவறு நேர்ந்தால்
நான் பொறுப்பல்ல
நாளைத் தெரியும்
அதன் விளைவு
பின்குறிப்பு
இந்தத் தற்கொலைக் காரணம்
அவள் இல்லை அவனும் இல்லை
இந்தக் கொலைக்குக் காரணம்
அவள்தான் அவனும் தான்
பின்குறிப்பு
இதை நீ படிக்க
விருப்பமில்லை என்றாலும்
விருப்பமற்று படி
இனிமேல் நான் உனக்கு
கடிதம் எழுதப் போவதில்லை
பின்குறிப்பு
இக்கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைக்கத்தெரியவில்லை
நீங்களாவது !
முதல் மாடியில் இருப்பவர்களுக்கு
என் பெயர் தெரியும்
இரண்டாவது மாடியில் இருப்பவர்களுக்கு
என் முகம் தெரியும்
மூன்றாவது மாடியில் இருப்பவர்களுக்கு
என்னைத் தெரியாது
அங்கே இருப்பது
வெறும் சுவர்கள் மட்டுமே
வாடகைக்கு அணுகவும்…!
தூங்கும்போது கனவு வருகிறது
அழும்போது கண்ணீர் வருகிறது
அடக்கமுடியாத கனவுகள்
அடக்கமுடியாத கண்ணீர்கள்
இதில் பொய் இல்லை
இல்லை, பொய் இருக்கிறது
கண்களுக்கு தொடப்புகள் அதிகம்
கண்களுக்கு துண்டிப்புகள் அதிகம்…!
அரானா
No comments:
Post a Comment