என் கவிதைகளுக்கு நான்
தலைப்பே வைத்ததில்லை
அப்படி வைத்தால்
உன் பெயரே
எல்லா கவிதைகளுக்கு
தலைப்பாக இருக்கும்….!
கற்பனையாக எழுதுவது
கவிதை
உன்னையே
கற்பனையாக நினைத்து
எழுதுவது…!
என்னை உருக்கி
நான்
உன்னைச் செய்தேன்…!
நீ
அணியும்
உடையின்
நிறத்தில் தான்
அதிகாலையில்
அந்நிறத்தில்
பூக்கள் மலர்கின்றன…!
உன்னைப் பார்க்காத தினம்
எல்லாம்
நான்
கறுப்பு
தினமாக
கொண்டாடுகிறேன்…!
யோசித்துக் கொண்டேயிருந்தேன்
வாழ்க்கையைப் பற்றி
என் வாழ்க்கை
நீ தான்…!
நானும் எல்லோரையும் போல
கடற்கரையில் அமர்ந்தேன்
கடலலைகள் வரவில்லை
உன்
நினைவலைகளே வந்தது…!
கடற்கரையில் நான் தனியாக
இருந்தாக நினைத்தார்கள்
நண்பர்கள்
அவர்களுக்கு எப்படித் தெரியும்
நான் உன் ஞாபகத்தோடு
இருக்கிறேன் என்று…!
தஞ்சை பெரிய கோவிலின்
வயது
ஆயிரம் ஆண்டுகள்
யாருக்கு தெரியும்
உன்னோடு நான் வாழும்
காலம்
இரண்டாயிரம் ஆண்டுகள் என்று…!
உன்
கண்களை
ஒப்பிடுகையில்
சூரியனின்
வெளிச்சம்
சற்று குறைவு தான்…!
எல்லா மொழியும்
கற்றேன்
உன் விழி மொழியை
தவிர…!
நீ
டூவீலரிலில் செல்லும் போது
என் இதயம்
ஃபோர் வீலர் போல்
வேகமாக செல்கிறது
உனக்கு ஏதும்
ஆகிவிடகூடாதென்று…!
புயல் ,
பூகம்பம் ,
சுனாமி ,
இவை உலகை
அழிக்கப் பிறந்தவை
நீ
என் ஒருத்தனை
அழிக்கப் பிறந்தவள்…!
உன்னை ஒருமுறைப் பார்த்தற்கு
அனுபவிக்கிறேன்
இரட்டை ஆயுள் தண்டனை
உன் மனச்சிறையில்…!
அர்த்தம் தெரியவில்லை
எனக்கு
”அழகு” என்பதற்கு
அழகு -க்கு
அர்த்தம்
நீ…!
மழையும்
மெளனம்
சாதிக்கிறது
உன்
சம்மதம்
கிடைக்க…?
காலையில்
உருகும்
பனிபோல்
உருகினேன்
உன்னைப் பார்த்து
பார்த்து…!
என்
பக்கத்தில்
நீ
என்னுடன்
பேசுவதற்காக
உன்
கண்ணை
எதிர்த்து
பேசமுடியவில்லை…!
உன்னைப் ப்ற்றி
நான் என்ன எழுதினாலும்
அது கவிதையாகிறது
இதனால்
எனக்கும்
கவிதைக்கும்
சண்டை…!
ஆப்பிக்காவுக்கு
நீ
சென்றுவிடதே
மீண்டும்
வெடிக்கப் போகிறது
நிறவெறிப் பிரச்சினை…!
ஓசோனில் ஓட்டை
நீ
மூச்சுவிட்ட
காற்றில்…!
நீ
பிறந்த
நாளிலிருந்து
நிலவுக்கு தங்கை ,
சூரியனுக்கு எதிரி ,
ஆக்னஸிற்கு தோழி…!
உன்
மைக்ரோ
கண்ணால்
என்
மாக்ரோ
இதயத்தை
உடைத்தெறிந்தாய்…!
உன்
பெயரை
எழுதிக்கொண்டேயிருந்தேன்
”மை” தீரவேயில்லை
”விரலில்”…!
நுண்ணூயிரியை
நீ
ஆராய்ச்சி செய்கிறாய்
ஏன்
என் உயிரை
அழிக்க நினைக்கிறாய்…!
உன்னைப் பற்றி
கவிதை எழுத
மரத்தின் நிழலில்
அமர்ந்தேன்
பூக்கள் உதிர்ந்தது…!
உன்
குரலைக் கேட்டால்
பின்லேடன்
மட்டுமல்ல
தீவிரவாதிகள்
எல்லோரும்
உன்
தீவிர பக்தன்
ஆகிவிடுவார்கள்…!
கோடை காலம்
மழைக் காலம்
குளிர் காலம்
இப்படி காலங்கள் மாறும்
உன்
நினைகாலம்
தவிர…!
நீ போகும் இடமெல்லாம்
ஒரு கூட்டம் கூடிவிடுகிறது
உன்
சிரிப்பைக் கடன் கேட்கும்
ரோஜாப் பூக்கள் ஒரு பக்கம்
உன்
அழகை கடன் கேட்கும்
ஐம்பூதங்கள் ஒரு பக்கம்
உன்
நடையை கடன் கேட்கும்
நாட்டியங்கள் ஒரு பக்கம்
உன்
பேச்சைக் கடன் கேட்கும்
பறவைகள் ஒரு பக்கம்
இந்த்க் காட்சியைப் பார்த்துப்படியே
கூட்டமாக அல்ல
ஒரு ஓரமாக
நான் ஒரு பக்கம்…!
நீ
பட்டாசு வைக்கும்
அழகைப்பார்த்து
அனைத்துப்
பட்டாசுக்ளும்
தன்னைத்தானே
வெடித்துக்கொண்டன….!
காலையில்
எழுந்து
எண்ணெயில்
குளித்து
உன்
ஈரகூந்தல்
சரவெடிபோல்
காற்றை
வெடித்துக்கொண்டிருந்தது…!
மழைக்காலத்தில்
மழையை வெறுத்தேன்
வெயில் காலத்தில்
வெயிலை வெறுத்தேன்
குளிர் காலத்தில்
குளிரை வெறுத்தேன்
இலையுதிர் காலத்தில்
மரங்களை வெறுத்தேன்
இவையெல்லாம்
உன்
நினைவலைகளை
விரட்டிக்கொண்டிருந்தது…!
மத்தாப்பூவை
கையில்
பிடித்துக்கொண்டு
சிரிக்காதே
யார்
சிரிக்கிறார்கள்
என்று கண்டுபிடிக்க முடியவில்லை…!
நீ
வெளியூர் சென்று
தீபாவளிக் கொண்டாட
போகிறாய் என்றவுடன்
உள்ளூர் வாசிகள்
அனைவரும்
பட்டாசு வெடிக்கவில்லை…,
ஏனென்றால்
தீபாவளி எங்கள்
ஊரில் இல்லை
என்று சொன்னார்கள்…!
குளிர் ,
பனி
படர்ந்த
ஊர்
ஊட்டி
நீ அங்கு சென்றதால்
50 டிகிரி மேல் வெப்பம்…!
பூந்தோட்டத்துக்கு
நீ
சென்ற வந்தபின்
பூக்களெல்லாம்
அஞ்சள் துறையை
நாடியது
இதுவரை உனக்கு
ஓராயிரம் பூக்கள்
தூது அனுப்பியிருக்க
வேண்டும்…!
சூரியனைப் பார்க்கும் போது
என்
கண்கள்
கூசவில்லை
உன் கண்ணைப்
பார்க்கும் போது
கூசுகிறது…!
உயிரில்லா
ஜீவன்களும்
உயிர்ப்பிழைக்கும்
”உன்னை சேலையில்”
பார்த்தவுடன்…!
அர்த்தம் புரியவில்லை
எனக்கு
நீ
பார்த்தப் பார்வைக்கு
பின்
தெரிந்தது
உன்
உதடுச் சிரிப்பில்
என்னைப் பிடிக்குமென்று…!
எப்போதோ
பார்த்துக்கொண்ட ஞாபகம்
எப்போதோ
பேசிக்கொண்ட ஞாபகம்
எப்போதோ
தொட்டுக்கொண்ட ஞாபகம்
எப்போதோ
புரிந்துக்கொண்ட ஞாபகம்
எப்போதோ
உன்னை மறந்த ஞாபகம்…
ரொம்ப
நாள்
கழித்து
உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தோன்றியது
வார்த்தைகள்
சரிவரவில்லை
கையெழுத்து
சரிவரவில்லை
புரிந்தது
நீ
என்னை விட்டு
விலகி நிற்கிறாய்…!
ஒரு மொழி
எப்போது அழகாகும்
பிழையில்லாமல்
பேசும் போது
ஒரு மொழி
எப்போது அழகாகும்
பிழையில்லாமல்
எழுதும் போது
ஒரு மொழி
எப்போது அழகாகும்
பிழையில்லாமல்
வாசிக்கும் போது
ஒரு மொழி
எப்போது அழகாகும்
பிழையில்லாமல்
காதலி தன் காதலனை
திட்டும் போது……….!
ஞாபகப்படுத்தி
ஞாபகப்படுத்திக்கொண்டே
அவளை
மறந்துகொண்டு
இருந்தேன்
மறந்து மறந்து
அவளை
ஞாபகப்படுத்திக்கொண்டு
இருக்கிறேன்
முடிவில்
அவள் ஞாபகமா அல்லது மறதியா…………?
நிலாவில்
வீடு கட்டி
என்னவளோடு
வாழ்ந்தேன்
தூக்கத்தில்
கனவில்…..!
நீ
எனக்கு
பிரியாவிடை
கொடுத்தாய்
வழக்கிலும்
வாழ்க்கையிலும்………..!
என்
சோகத்தை
குருவியிடம்
சொன்னேன்
பாவம் அதனால்
என்ன செய்ய முடியும்
அதன் மொழியில்
”குக்கூ” என்றது……!
வகுப்பறை ,
நூலகம் ,
உணவகம்
எங்கு தேடியும்
நீ
கிடைக்கவில்லை
இன்று
கல்லூரிக்கு
விடுமுறை….!
தினமும்
நெருப்பைத்தின்று
வாழ்பவர்
பலர்
காதலித்துப் பார்
உனக்கு புரியும்…!
நேற்று
ஏன்
என்னைப் பார்க்க
வரவில்லை
உன்னுடன்
நான் பேச முடியாது
இப்படி
என்னிடம்
கேள்வி கேட்பது
உன் கண்கள்…!
இறந்தபின்
அவனிடம்
நீ மறுபடியும்
உயிர்ப் பிழைப்பாய்
என்றால்???
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
எனக்கும்!!!
No comments:
Post a Comment